கோலிவுட்டில் இரு பெரும் துருவங்களாக இருப்பவர்கள் தான் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பிறகு இவர்களுடைய படங்கள் வாரிசு மற்றும் துணிவு நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்ற விவாதம் இன்று வரை பரபரப்பாக தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு ஹீரோக்களுமே தங்களுடைய அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.
இதில் நடிகர் விஜய் படத்தின் படப்பிடிப்பு வேலைகளே நடந்து கொண்டிருக்கின்றன. இதில் நடிகர் அஜித் தன்னுடைய 62 வது படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் அரவிந்த்சாமி, சந்தானம், ஜி பி முத்து ஆகியோர்கள் கூட இணைவதாக தகவல்கள் வெளியாகி விட்டன. படத்தின் கதையை இதுதான் என்று கூட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Also Read: விஜய் இடத்தை சல்லி சல்லியாக உடைக்கும் அஜித்.. அடுத்தடுத்து நடக்க போகும் எதிர்பாராத சம்பவங்கள்
இந்நிலையில் நடிகர் அஜித்தின் 63 வது படத்தின் அப்டேட் நேற்றைய தினம் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பரபரப்புக்கு மிக முக்கிய காரணம் அந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் அட்லி தான். அட்லி, நடிகர் விஜய்யை தவிர வேறு எந்த நடிகர்களுக்கும் படம் பண்ண மாட்டார் என்று கோலிவுட்டில் ஒரு நம்பிக்கையே இருந்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி அட்லி இப்போது அஜித்துடன் இணைகிறார்.
அஜித் -அட்லி காம்போ நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இயக்குனர் அட்லியை தங்களால் முடிந்தவரை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் பயங்கர விமர்சனங்களையும் பெற்று வருகிறது. அதற்கு காரணமும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மட்டுமே.
Also Read: அட்லீ, ஏஆர் ரகுமானுடன் கூட்டணி போடுவது உறுதியா? அஜித் தரப்பில் இருந்து வெளிவந்த ஏகே 63 அப்டேட்
அதாவது இயக்குனர் அட்லி தொடர்ந்து நடிகர் விஜய்க்கு மூன்று ஹிட் படங்கள் கொடுத்தார். இதனால் முன்பெல்லாம் அஜித் ரசிகர்கள் அட்லியை பங்கமாய் கலாய்த்து வந்தனர். அட்லி எடுக்கும் படங்கள் எல்லாமே காப்பி தான் என்று கலாய்த்து வந்தனர். ஆனால் அட்லீ இப்போது அஜித்துக்கு படம் பண்ணுகிறார் என்றதும் அவரை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். இதுதான் இந்த விமர்சனத்திற்கு காரணம்.
இதற்கிடையில் அட்லி விஜய்யின் 68வது படத்தையும் இயக்குகிறார். அதனால் விஜய் ரசிகர்கள் அட்லி அடுத்து தளபதி 68 இல் பண்ணப்போவது அசுரவதம் என்று ஒரு பக்கம் பில்டப் ஏற்றி வருகின்றனர். அஜித் ரசிகர்களும் அட்லி அஜித்துக்கு தான் நல்ல படம் பண்ணுவார் என்று மற்றொரு பக்கம் பில்டப் ஏற்றி வருகின்றனர். இப்படி விஜய் -அட்லி காம்போ, அஜித் – அட்லி காம்போ என்று சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.
Also Read: விக்னேஷ் சிவன் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போட்ட அஜித்.. வேற லெவல் காம்போவில் உருவாகும் AK63