வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

போதும்டா சாமி முடியல, 3.21 மணி நேரம் மூச்சி திணறவிட்ட அனிமல்.. இதுல வேற ஒரே நாள்ல 100 கோடி அள்ளி தின்னறணுமா?

Animal Movie: அட நம்ம பாலிவுட் சினிமாவுக்கு என்னதான் ஆச்சு என்று, சின்ன குழந்தைகள் கேட்கும் அளவுக்கு இப்போது ரிலீஸ் ஆகும் இந்தி படங்கள் இருக்கின்றன. பிரம்மாஸ்திரம், ஆதி புரூஷ் என மிகப் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி அடுத்தடுத்து சொதப்பி கொண்டிருக்கின்றன. இதற்கு இடையில் ஜவான் மற்றும் பதான் போன்ற படங்கள் ஓரளவுக்கு இந்தி சினிமாவை காப்பாற்ற முயற்சிக்க, மொத்தமாய் மண்ணை வாரி போட்டிருக்கிறது அனிமல் படம்.

எவ்வளவு பெரிய ஹீரோ நடித்திருந்தாலும் அந்த படத்தின் வெற்றி மற்றும் தோல்வியை அது ஒளிபரப்பாகும் நேரமும் முடிவு செய்து கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது அனிமல் படத்தை கிட்டத்தட்ட 3 மணி நேரம் 21 நிமிடத்திற்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். தியேட்டரில் உட்கார்ந்திருந்த எல்லோரும் ஆள விடுடா சாமி என்று அலறி அடித்து ஓடும் அளவுக்கு வச்சு செய்து இருக்கிறார்கள்.

Animal 1
Animal 1

மூன்று மணி நேர அக்கப்போர்

ஒரு அப்பளக்கட்டுக்கு எதுக்குடா இந்த அக்கப்போரு என்று காமெடியாக கேட்பது உண்டு. அப்படிதான் இந்த அனிமல் படத்தில் அப்பா மற்றும் மகன் பிரச்சனைக்கு எதுக்கு இவ்வளவு வன்முறை என்று கேட்கும் அளவுக்கு சண்டைக் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள் என பதர வைத்திருக்கிறார் இயக்குனர். அர்ஜுன் ரெட்டி படத்தை ரன்பீர் கபூர் வெர்ஷனில் பார்த்தது போல் இருக்கிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read:Animal Movie Review: 3.21 மணி நேரம் சூடு தாங்கியதா ரன்வீர் கபூரின் அனிமல்.? ஜவானை மிஞ்சினாரா முழு விமர்சனம்

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் நடிக்கிறார் என்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாம் என்பது போல் அவரை ஹீரோயின் மெட்டீரியல் ஆக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

Animal 2
Animal 2

படம் ரிலீஸ் ஆன ஒரு மணி நேரத்திற்குள்ளேயே பாலிவுட்காரர்கள் ஆகா ஓகோ என்று படத்தை புகழ்ந்து தள்ளி விட்டார்கள். அட, அதெல்லாம் ஒன்னும் கிடையாது பா, மூணு மணி நேரம் தியேட்டர்ல உட்காரவே முடியல என கதறிக் கொண்டிருக்கிறார்கள் ட்விட்டர் வாசிகள். எதுவுமே அளவோடு இருந்தால்தான் பார்த்து ரசிக்க நன்றாக இருக்கும்.

Animal 3
Animal 3

படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதி படு மொக்கையாக இழுத்தடிப்பதாக இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இன்டர்வெல் பிளாக் சீனுக்கு முன்னாடி நடக்கும் ஃபைட் சீன் தான் இந்த படத்தை ஓரளவுக்கு டீசண்டாக காப்பாற்றி இருக்கிறது. மொத்தத்தில் அனிமல் படம் ஜவான் அளவுக்கு எதிர்பார்க்கப்பட்டு, மொத்தமாய் சொதப்பி இருக்கிறது.

Also Read:தெளிவே இல்லாமல் காதலனின் கோட்டை போட்டு போஸ் கொடுத்த தமன்னா.. வசமாக சிக்கிய புகைப்படம்.!

Trending News