சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ரவீனாவுக்கு சூனியம் வச்சிட்டு போன பூமர் ஆண்டி.. பிக் பாஸில் நடக்கப் போகும் எதிர்பாராத டிவிஸ்ட்

BB7 Tamil: சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என அந்த காலத்தில் பழமொழி சொல்வது உண்டு. உண்மையில் பல பேருக்கு நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீனாவின் ஆன்ட்டி வந்ததுக்கு அப்புறம் தான் இந்த பழமொழிக்கு நிஜமான அர்த்தம் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்கு பூமர் வேலையை செய்து விட்டுப் போயிருக்கிறார் அந்த ஆன்ட்டி.

ரவீனா மற்றும் மணி இருவரும் ஏதோ புதுசாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து தான் அறிமுகமான மாதிரி அந்த ஆன்ட்டி ஓவர அலப்பறை கொடுத்து விட்டார். ரவீனா, மணிக்கு கொடுத்த மோதிரத்தை முதற்கொண்டு திரும்ப வாங்க சொன்னது, ரவீனா எனக்கு எதுவுமே தெரியாது என்பது போல் குழந்தை மாதிரி முகத்தை வைத்து நடித்ததும் அஷ்ட கோணலாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்த நிலையில் மணி மற்றும் ரவீனா இவ்வளவு நாள் எப்படி உள்ளே இருக்கிறார்கள் என்று பார்வையாளர்களுக்கே சந்தேகமாக இருந்தது. நிறைய விஷ செடிகளை எல்லாம் புடுங்க வேண்டி இருந்ததால், ரவீனா மற்றும் மணியை பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் விட்டு வைத்திருந்தார்கள்.

Also Read:அப்ப எல்லாமே நடிப்பா கோபால்.? பூர்ணிமாவை கருவேப்பிலை போல் தூக்கி எறிந்த மாயா

இப்போது ரவீனா ஆன்ட்டி உள்ளே வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்திருக்கிறார். அதாவது, ரவீனாவுக்கு சீரியல் ரசிகர்கள் என ஒரு கூட்டம் இருந்தது. ஆனால் மணியை பொருத்தவரைக்கும் அவருக்கு ஆதரவாளர்கள் என்று அவ்வளவாக வெளியில் யாரும் இல்லை. ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் தான் அவர் எத்தனை வாரங்கள் தப்பித்துக் கொண்டு வந்தார்.

நெட்டிசன்கள் வச்சு செய்யும் பூமர் ஆன்ட்டி

மணி இல்லை என்றால் ரவீனா எப்போதோ வெளியே தூக்கி அடிக்கப்பட்டிருப்பார். அப்படி இருந்தும் நேற்று அந்த ஆன்ட்டி மணியை ரொம்ப கஷ்டப்படுத்தும் அளவிற்கு பேசியிருந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையாக ஓவர் நைட்டில் இப்போது மணிக்கு ஆதரவாளர்கள் அதிகமாகி விட்டார்கள். அதே நேரத்தில் ரவீனாவை வெளியே அனுப்பி விட வேண்டும் என்று முடிவெடுக்கும் அளவுக்கு சூழல் மாறிவிட்டது.

மணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் கண்டிப்பாக அவர் இறுதிப் போட்டியில் பைனல் லிஸ்டில் இருக்கும் ஐந்து பேரில் ஒருவராக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறி இருக்க வேண்டிய மணியை, ஓவர் நைட்டில் ஒபாமா ஆக்கிவிட்டார் ரவீனாவின் பூமர் ஆன்ட்டி. தற்போது இவரை கலாய்த்து சமூக வலைத்தளங்களில் நிறைய மீம்ஸ்கள் இரண்டாகி கொண்டு இருக்கின்றன.

Also Read:ரவீனாவை எச்சரித்த கோட் வேர்ட்.. தொக்கா தூக்கி வெளியில் வீசிய பிக்பாஸ்

Trending News