புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

நீங்க நேர்ல வரலனாலும் பரவாயில்லை, கொஞ்சம் அடக்கி வாசிங்க.. அஜித்துக்கு வலுக்கும் கண்டனங்கள்

Ajith kumar: நடிகர் அஜித்குமார் தன்னுடைய 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் நாட்டில் இருந்தார். அந்த நாட்டில் தட்பவெப்ப நிலை காரணமாக குளிர் அதிகமாக இருப்பதால் பகல் நேரங்களில் மட்டுமே ஷூட்டிங் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியான நேரத்தில், டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொள்ளும் அஜித் இரண்டு வாரங்கள் கேட்க ஓய்வெடுத்துவிட்டு பிறகு தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் புரட்சிக் கலைஞர், கேப்டன் என தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட விஜயகாந்த் டிசம்பர் மாத இறுதியில் உடல் நலம் இன்றி உயிரிழந்தார். ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பித்துப் போன நிலையில், சினிமா கலைஞர்கள் அத்தனை பேரும் விஜயகாந்தின் அஞ்சலிக்கு ஒன்று கூடினார்கள். வெளிநாடுகளில் படப்பிடிப்பில் இருந்த, விடுமுறைக்காக இருந்த கலைஞர்களால் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

சில முன்னணி நடிகர்கள் விஜயகாந்த் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளவில்லை என நெட்டிசன்களால் பயங்கரமாக விமர்சனம் செய்யப்பட்டது. தளபதி 68 படபிடிப்பில் இருந்த விஜய் அன்று இரவே கேப்டனுக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். வெளிநாட்டில் இருந்த சூர்யா கேப்டன்காக சில நிமிடங்கள் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். தற்போது அவரும் இந்தியா திரும்பி இருக்கிறார்.

Also Read:நீங்க எல்லாம் வரலைன்னு யாரு அழுதா.? விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார், கார்த்தி

நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, சரத்குமார் போன்றவர்கள் நேரில் சென்று கேப்டனின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது போன்ற ஒரு சூழ்நிலையில் நடிகர் அஜித்குமாருக்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த இரண்டு தினங்களாக அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி கொண்டிருப்பது தான்.

துபாய் கொண்டாட்டத்தில் அஜித்

அஜித் குமார் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால்தான் விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்கு வர முடியவில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் அஜித் தன்னுடைய குடும்பத்தோடு துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கிறார். இது சம்பந்தப்பட்ட நிறைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகிறது. இதைத் தொடர்ந்து துபாயில் ஒரு பார்ட்டியில் அஜித் நடனமாடும் வீடியோவும் வைரலானது.

நேற்று அஜித்குமாரின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷாலினி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். அஜித் துபாய் நாட்டில் தன்னுடைய குடும்பத்தார் உடன் இருப்பதால் உடனடியாக இந்தியா வர முடியவில்லை என்றாலும், அவருடைய மனைவி ஷாலினி இப்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் கூட விஜயகாந்தை பற்றி பேசி அஜித் ஏதாவது ஒரு இடங்கள் தெரிவித்து இருக்கலாம்.

ஷாலினியும் திரை துறையை சேர்ந்தவர் தான். அவரும் விஜயகாந்தை பற்றி எந்த ஒரு பதிவையும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் போடவில்லை. அப்படி இருக்கும்போது பிசியாக இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் அஜித் பார்ட்டிகளில் ஆடிக்கொண்டிருப்பது, ரசிகர்களுடன் போட்டோ எடுப்பது என வெளிவரும் செய்திகள் இது போன்ற சமயத்தில் ஏற்கத்தக்கதாக இல்லை. நீங்கள் நேரில் வந்து கேப்டனை பார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, தயவு செய்து அடக்கி வாசிங்க என நெட்டிசன்கள் இணையத்தில் குமுறி வருகிறார்கள்.

Also Read:கேப்டனை அடுத்து கலைஞரை அவமதிக்கும் 6 நடிகர்கள்.. வெளிநாட்டிலேயே டேரா போட்ட விஷால்

Trending News