தளபதி விஜய் ‘மாஸ்டர்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் பொங்கலன்று ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியின் போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வாரிசு படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோவாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த பாடலை நடிகர் விஜய் மானசியுடன் இணைந்து பாடியிருக்கிறார். கவிஞர் விவேக் பாடல் வரிகள் எழுத தமன் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடல் தற்போது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read: விஜய்க்கு பயத்தை காட்டிய அஜித்.. துணிவை தட்டி தூக்க தளபதி எடுத்த பிரம்மாஸ்திரம்
“கட்டு மல்லி கட்டி வெச்சா வட்ட கருப்பு பொட்டு வெச்சா” என ஆரம்பிக்கும் இந்த பாடல் வரிகள் ஏற்கனவே பல சர்ச்சையில் சிக்கின. வேறொரு படத்தின் மெட்டுக்களை தமன் உபயோகித்து இருக்கிறார் எனவும், ‘செல்லம்மா’ பாடலில் சிவகார்த்திகேயன் போட்ட டான்ஸ் ஸ்டெப்புகளை அப்படியே விஜய் காப்பி அடித்துவிட்டார் எனவும் சமூகவலைத்தளங்களில் பிரச்சனைகள் கிளம்பிய நிலையில், இப்போது இந்த பாடல் சிக்கியிருப்பது பாடல் வரிகளில்.
“உச்சு கொட்டும் நேரத்துல பட்டுனு பாத்தியே உச்ச கட்டம் தொட்டவளே” என்னும் பாடல் வரிக்கு இப்போது பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற இரட்டை அர்த்த வசனங்கள் உள்ள பாடல்களை குழந்தைகள் அர்த்தம் புரியாமலேயே பாடுவார்கள் எனவும், இது வன்மையாக கண்டிக்கதக்கது எனவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read: 250 கோடி, 300 கோடி கதையெல்லாம் சும்மாவா.. உள்ளூரில் வியாபாரம் ஆகாத தளபதியின் வாரிசு
விஜய் போன்ற டாப் ஸ்டார்களின் பாடல்கள் ரொம்ப சீக்கிரமாகவே அனைத்து மக்களிடமும் சென்று விடும் என்றும், இது சமூகத்திற்கு நல்லதில்லை எனவும், நடிகர் விஜய் கொஞ்சம் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த வரிகள் நீக்கப்பட்டு பாடல் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
விஜய் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் போதைக்கு அடிமையானது போல் நடித்தது சர்ச்சையானது. பொதுவாகவே உச்ச நட்சத்திரங்கள் படங்களில் மது மற்றும் சிகரெட் போன்ற காட்சிகளை தவிர்த்து வருகின்றனர். அதே போன்று இரட்டை அர்த்த வசனங்கள், இரட்டை அர்த்த பாடல் வரிகள் போன்றவற்றை தவிர்ப்பது ஆரோக்கியமான சினிமா சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்.