வலிமை படத்தை தொடர்ந்து எச் வினோத் தற்போது துணிவு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது. வலிமை படம் மோசமான விமர்சனங்களை சந்தித்ததால் ஒரு மாபெரும் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வினோத் செயல்பட்டு வருகிறார்.
மேலும் அஜித் இப்படத்தில் மாஸ் லுக்கில் உள்ளார். அண்மையில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதில் அஜித் மாஸ் ஆக கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கிறார். இந்நிலையில் ஏகே 61 படத்தின் துணிவு என்ற டைட்டிலை வினோத் அட்டை காட்டி அடித்துள்ளதாக நெடிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Also read : மணி ஹெய்ஸ்டை ஓவர் டேக் செய்த வங்கி திருட்டு.. துணிவு படத்தின் உண்மையான கதை இதுதான்
எப்போதுமே படத்தின் கதைக்கும் டைட்டிலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும். அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வீரம், விவேகம், விசுவாசம், வலிமை போன்ற படங்களின் பெயர்கள் கதையின் மையக்கருத்தோடு ஒன்றி சென்றது. அதேபோல் தற்போது துணிவு என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதால் படத்தில் மாஸ் சம்பவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு துணிவு என்ற டைட்டிலில் குறும்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை கோடீஸ்வரன் இயக்கி, தயாரித்திருந்தார். அந்த டைட்டிலை தான் தற்போது வினோத் காப்பி அடித்துள்ளார் என்று குறும்படத்தின் துணிவு படத்தின் டைட்டிலுடன் அஜித்தின் துணிவு படத்தையும் ஒப்பிட்டு வருகிறார்கள்.
Also read : இணையத்தை உலுக்கிய அஜீத்தின் AK-61 பட போஸ்டர்.. துப்பாக்கி, கடுக்கனுடன் மிரட்டும் மாஸ் லுக்
ஏற்கனவே துணிவு என்ற டைட்டிலில் குறும்படம் இருந்ததை வினோத் தெரிந்த செய்தாரா, இல்லை எதர்ச்சையாக செய்தாரா என்பது தெரியவில்லை. சில சமயங்களில் ஒரு படத்தில் இடம்பெற்ற காட்சிகள் வேறு ஒரு படத்தில் அப்படியே இடம்பெறும். வலிமை படத்திலேயே ஹாலிவுட் படத்தில் இருந்து நிறைய காட்சிகள் காப்பியடிக்கப்பட்டதாக விமர்சனங்கள் வந்தது.
எப்போதுமே அட்லி தான் இவ்வாறு காப்பியடிப்பதில் நெட்டிசன்களிடம் சிக்குவார். ஆனால் தற்போது தொடர்ந்து வினோத் சிக்கி வருகிறார். மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியான போதே இவ்வாறு கலாய்த்து வரும் நிலையில் ட்ரெய்லர் வெளியானால் என்ன கதியாகுமோ என்ற பயத்தில் துணிவு படக்குழு உள்ளது.
Also read : 20 வருடங்களாக முருகதாஸை ஒதுக்கி வைத்துள்ள அஜித்.. பின்னணியில் இருக்கும் சம்பவம்