திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இது என்ன புது நாடா இருக்கு.? உலகம் சுற்றும் அஜித்தை ஒரே போஸ்ட்டில் அசிங்கப்படுத்திய நெட்டிசன்ஸ்

Actor Ajith: அஜித் எங்கப்பா இருக்காரு என்று வலைவீசி தேடும் அளவுக்கு பைக்கிலேயே உலகத்தை சுற்றிக் கொண்டிருக்கிறார் ஏ கே. துணிவு முடிந்த கையோடு கிளம்பியவர் இன்னும் தன் பயணத்தை முடித்த பாடில்லை. இதனால் அவருடைய ரசிகர்கள் தான் நொந்து நூலாகி இருக்கின்றனர்.

இத கூட மனச தேத்திகிட்டு பொறுத்துப்போன ரசிகர்களுக்கு சோசியல் மீடியாவில் அஜித்தை பற்றி வரும் ட்ரோலை தான் தாங்க முடியவில்லை. ஏனென்றால் துணிவு, வாரிசு இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதி இந்த வருடத்தை அமோகமாக தொடங்கி வைத்தது.

Also read: வெளிவந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் அப்டேட்.. எனக்கு அந்த தேதியில் படம் முடியனும்னு அஜித் போட்ட கண்டிஷன்

அதனாலேயே அடுத்த படங்களும் ஒரே நாளில் மோதும் என்று எதிர்பார்த்த நிலையில் விடாமுயற்சிக்கு அடுத்தடுத்த சோதனை காலமும் வந்தது. எப்போதோ ஆரம்பித்து இந்நேரம் முக்கால்வாசி கிணறை தாண்டி இருக்க வேண்டிய அந்த படம் டேக் ஆஃப் ஆகாமலேயே இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் இப்போது அஜித்தின் உலக சுற்றுப் பயணத்தை கண்ட மேனிக்கு கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதிலும் ஒரு குசும்புக்கார நெட்டிசன் அஜித் உலக சுற்றுப்பயணத்தை முடித்து திரும்பி வரும்போது இந்தியா, பாரத் அப்படின்னு மாறி இருக்கும்.

Also read: மனைவிக்கு வெளிநாட்டில் சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்.. நாடு நாடாக சுற்றியது வீண் போகல

உடனே நண்பர் இது என்ன புது நாடாக இருக்கே அப்படின்னு திரும்பவும் பைக்கை எடுத்துக்கிட்டு இந்தியா முழுக்க டூர் கிளம்பிட போறாரு என்று பங்கம் செய்திருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து கொண்டிருக்கிறது. அதிலும் சிலர் நீங்கள் சொல்றது உண்மை தான் நண்பா என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

ajith-troll
ajith-troll

கடைசியில அஜித்தோட நிலைமை இப்படி ஆயிடுச்சுன்னு அவருடைய ரசிகர்கள் தான் பாவம் நொந்து போய் இருக்கின்றனர். ஆனாலும் விடாமுயற்சி மட்டும் ஆரம்பிக்கட்டும் பேசுற வாயெல்லாம் கப்சிப்-ன்னு ஆயிடும் என்று பதிலடி கொடுக்கவும் அவர்கள் மறக்கவில்லை. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதுன்னு தான் தெரியல.

Also read: கேரியரை கெடுத்துக்கொண்ட 6 குழந்தை நட்சத்திரங்கள்.. முகம் சுளிக்க வைத்த அஜித் மகள்

Trending News