ரிஷி பாமா என்னும் இயற்பெயர் கொண்ட மும்பையை சேர்ந்த நடிகை தான் சிம்ரன். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் ஹிந்தி படங்களில் ஹீரோயினாக அறிமுகமானார். தெலுங்கில் இவருடைய முதல் படமே மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் தான். அதேபோன்று கன்னடத்தில் இவருடைய முதல் படமே கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் உடன் தான். இப்படி முதல் படங்களிலேயே அதிர்ஷ்ட நாயகியாக இருந்தவர் தான் சிம்ரன்.
கோலிவுட்டில் தன்னுடைய முதல் படமே தளபதி விஜய், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சரோஜா தேவியுடன் சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படம் தான். இந்த படத்தில் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் கலந்த ரோலில் தான் சிம்ரன் நடித்திருப்பார். அதன் பின்னர் பூச்சூடவா, விஐபி, நேருக்கு நேர் போன்ற வெற்றி படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
Also Read: ஒவ்வொரு நாளும் நரக வேதனையில் இருக்கும் சிம்ரன்.. இப்படி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது
நடிகை சிம்ரன் இன்றைய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித்துக்கு ஒரு அதிர்ஷ்டநாயகியாகவே இருந்தார். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், அவள் வருவாளா, பிரியமானவளே போன்ற வெற்றி படங்களில் இந்த நாயகர்களுடன் ஜோடி போட்டவர் நடிகை சிம்ரன். மேலும் சிம்ரன் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார்.
சிம்ரனின் வெற்றிக்கு அவருடைய சிறந்த நடிப்பு ஒரு காரணம் என்றாலும், மற்றொரு மிக முக்கிய காரணம் அவருடைய சிக்கெகன்று இருக்கும் உடலமைப்பும் மேலும் நடன திறமையும் தான். டான்ஸில் பட்டையை கிளப்பும் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் இவர்களுக்கு சரி சமமாக நின்று ஆட கூடியவர் நடிகை சிம்ரன். நடன இயக்குனர் ராஜூ சுந்தரத்துடன் இவர் ஆடிய ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் இன்றுவரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
Also Read: மார்க்கெட் இழந்தும் அசால்ட் பண்ணும் 5 நடிகைகள்.. அந்த மாதிரி பிசினஸில் கல்லா கட்றாங்க!
90களில் முன்னணி கதாநாயகிகளாக இருந்த பல நடிகைகளும் தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் சிம்ரன் மட்டும் 50 வயதை நெருங்கியும் இன்றும் அதே போன்றே இருக்கிறார். சமீபத்தில் வெளியான இவருடைய புகைப்படம் ஒன்று ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிம்ரனின் அழகும், ஸ்டைலும் இன்றளவும் குறையவே இல்லை என்று ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
2000 வருடத்தின் தொடக்கத்தில் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிம்ரன் மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சிம்ரன் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடி சேர்ந்தார். தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: அரை கிளவி ஆனாலும் கெத்தை அப்படியே மெயின்டைன் பண்ற 5 நடிகைகள்.. மவுஸ் குறையாத குந்தவை