சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆண்டவரையே சிக்க வச்சிட்டாங்களே.. அண்ட புளுகினி பூர்ணிமாவின் முகத்திரையை கிழிக்கும் நெட்டிசன்கள்

Biggboss 7: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் பிக்பாஸ் பற்றிய விவாதம் தான் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது தான் இதற்கு முக்கிய காரணம். இதற்கு பின்னணியில் இருக்கும் சதிவலைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அம்பலப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இதில் ஆண்டவரும் சிக்கி இருப்பதுதான் ஹைலைட். அந்த வகையில் கமல் பிரதீப்புக்கு தன் பக்க நியாயத்தை பேசுவதற்கு எந்த வாய்ப்பும் கொடுக்காதது மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் வாய் துடுக்குத்தனத்தால் அவர் எதையாவது உளறி விடுவாரோ என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க பூர்ணிமா வைத்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய் என்பதை நெட்டிசன்கள் வீடியோ மூலம் குறிப்பிட்டு வருகின்றனர். அதாவது பால் டாஸ்க்கின் போது பிரதீப் தன்னைப் பற்றிய மோசமான கமெண்ட் கொடுத்தார் என்பதுதான் பூர்ணிமாவின் புகார். அதைத்தான் நேற்றைய லைவில் ரவீனாவும் அப்பட்டமாக கூறியிருந்தார்.

Also read: குள்ளநரி கூட்டத்தை கிழித்து தொங்க விட்ட அச்சு.. களத்தில் குதித்த விச்சு, ரணகளமான பிக்பாஸ் வீடு

உண்மையில் பிரதீப் விஷ்ணுவை பார்த்து தான் அப்படி ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். இதை பூர்ணிமாவிடமும் அவர் விளக்கமாக சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பெண்களைப் பற்றி நான் இப்படி எல்லாம் பேச மாட்டேன் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனாலும் அண்ட புளுகினி பூர்ணிமா இதை மறைத்து அவர் மேல் அபாண்ட பழியை சுமத்தி இருக்கிறார்.

அதேபோல் மற்றவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது. தற்போது ஆடியன்ஸின் கேள்வி ஒன்றே ஒன்றுதான். இதையெல்லாம் பார்க்காமல் எப்படி பிரதீப் வெளியேற்றப்பட்டார். ஒருவேளை கமல் சார் சொன்னா கூட மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொன்னதுதான் ஆண்டவரின் ஈகோவை கிளறி விட்டு விட்டதா என தெரியவில்லை.

ஆனால் கமல் இதில் தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு விட்டார் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக இருக்கிறது. அதனாலேயே இப்போது அவருக்கு எதிராக சோஷியல் மீடியாவில் பல கருத்துக்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இப்படி பிக்பாஸ் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த வார இறுதியில் ஆண்டவர் அதற்கான விளக்கத்தை கொடுப்பாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also read: பைத்தியக்கார பட்டம் கொடுக்க பார்க்கும் ஏஜென்ட் டீம்.. வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

Trending News