Baakiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஒரு காலத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது.
தற்போது தயவு செய்து இந்த சீரியலை முடித்துக் கொள்ளுங்கள் என நேயர்களே கதறும் அளவுக்கு இயக்குனர் படாத பாடு படுத்தி வருகிறார்.
ஏற்கனவே பாக்யா- கோபி- ராதிகா என்று பார்த்து பார்த்து சலித்து போய்விட்டது. போதாத குறைக்கு இனியாவை வைத்து இந்த இயக்குனர் கொடுக்கும் லவ் ட்ராக்குகள் இம்சையின் உச்சமென்றே சொல்லலாம்.
இனியாவுக்கு இந்த சீரியலில் இதுவரை இரண்டு மூன்று காதல்கள் அரங்கேறி விட்டன.
இப்படி ஒரு நெகட்டிவிட்டி தேவை தானா?
இனியா சமீபத்தில் கலந்து கொண்ட நடன போட்டி எபிசோடுகள் இணையதளத்தில் எந்த அளவுக்கு ட்ரோல் செய்யப்பட வேண்டுமோ அதையும் தாண்டி கேலிக்குள்ளானது.
உண்மையை சொல்லப்போனால் இந்த மீம்ஸுகளை பார்த்துவிட்டு பாக்கியலட்சுமி சீரியலை பார்த்தவர்கள் அதிகம். இப்போது இனியாவுக்கு மீண்டும் ஒரு லவ் ட்ராக் கிடைத்திருக்கிறது.
அதுவும் இனியா வீட்டில் வேலை செய்யும் செல்வியின் மகனை இனியா காதலிப்பது போல் காட்டப்படுகிறது. செல்வி கிட்டத்தட்ட பல வருடங்களாக பாக்யா வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒரு முறை கூட அவருடைய மகனை பாக்யா வீட்டில் இருப்பவர்கள் பார்த்ததில்லை என்று காட்டுவதெல்லாம் கடுப்பின் உச்சம்.
காதலனை தேடி வரும் இனியா செல்விதான் அவளுடைய அம்மா என்று தெரிந்து அதிர்ச்சி அடைவதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை.
வீட்டில் வேலை செய்பவர் என்பதை தாண்டி செல்வி அந்த வீட்டில் ஒரு உறுப்பினர் போல தான் இருக்கிறார்.
அப்படி இருக்கும்போது அவருடைய மகன் யார் என இனியாவுக்கு தெரியாது என்பதெல்லாம் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியாதது.
இனியாவை நெகட்டிவாக ட்ரோல் செய்தால் சீரியலுக்கு டிஆர்பி அதிகரிக்கும் என்பதால் அந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நேகாவை பதம் பார்ப்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாதது.