Jyothika: மும்மொழி கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் குருவி உட்கார பனம் பழம் விழுந்த கதையாய் ஜோதிகா நேர்காணல் ஒன்று பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
நடிகை ஜோதிகா பிரபல யூட்யூப் சேனலுக்கு இன்டர்வியூ ஒன்று கொடுத்திருந்தார். அந்தப் பேட்டியை தொகுத்து வழங்கியவர் கோபிநாத்.
ஜோதிகாவை விளாசும் நெட்டிசன்கள்
அவர் வீட்டில் தமிழ் அதிகமாக பேசுவீங்களா இல்லை இந்தி பேசுவீங்களா என ஜோதிகாவிடம் கேட்கிறார். அதற்கு ஜோதிகா, என்னுடைய மகள் தியா நன்றாக இந்தி பேசுவார்.
ஆனால் மகன் தேவ் இந்தி பேசினாலே அம்மா இந்தி வேண்டவே வேண்டாம் என்று சொல்லிவிடுவார். நான், சூர்யா, பிள்ளைகள் எல்லாம் பெரும்பாலும் தமிழில் தான் வீட்டில் பேசுகிறோம் என்று சொல்லி இருக்கிறார்.
இந்தி பிடிக்காத குழந்தையை மும்பை பள்ளிக்கூடத்தில் சேர்த்து ஏன் மேடம் இந்திய திணிக்கிறீங்க என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்