வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகலையா, ஓவரா வாய் விடும் விக்கி.. ரஜினியும், நீங்களும் ஒன்னா பாஸ்?

Nayanthara: நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியின் வாழ்க்கையை டாக்குமென்டரிக்கு முன், டாக்குமென்டரிக்குப் பின் என பிரித்துக் கொள்ளலாம் போல. பெரும்பாலும் இந்த தம்பதி மற்றும் இவர்களுடைய குழந்தைகளுக்கு ரசிகர்கள் தங்களால் முடிந்த அளவு நிறைய பாசிடிவ் விமர்சனங்களை தான் இதுவரை கொடுத்திருக்கிறார்கள்.

பெரிய அளவில் விக்னேஷ் சிவன் மீது யாருக்கும் எதிர்ப்பு என்று எதுவுமே இருந்தது கிடையாது. ஆனால் நயன்தாரா Beyond the fairy tale டாக்குமெண்டரியில் ஆரம்பித்தது எல்லா பிரச்சனையும். தனுஷை பார்த்து வாழு வாழ விடு என விக்னேஷ் சிவன் சொன்னது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சம் கடுப்பு தான்.

ரஜினியும், நீங்களும் ஒன்னா பாஸ்?

அதைத் தாண்டி டாக்குமெண்டரியில் விக்னேஷ் சிவன் பேசிய விதம் ரசிகர்களுக்கு அவ்வளவாக பொருந்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் தாங்க விக்னேஷ் சிவன், நயன்தாரா கிட்ட ஹஸ்பண்டா வேலை பார்க்கிறேன் என்று அவர் பேசியது போல தான் இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையை விக்னேஷ் சிவன் அந்த டாக்குமெண்டரியில் பேசிய சின்ன கிளிக் ஒன்று பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. அதில் நானும் நயன்தாராவும் காதலிப்பது தெரிந்து நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கா என கலாய்த்தார்கள்.

ஏன் அந்த நாய்க்கு பிரியாணி கிடைச்சா என்ன. ஒரு சாதாரண கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகலையா, அதை மாதிரி தான் நான் நயன்தாராவை கல்யாணம் பண்ணது என பேசி இருக்கிறார். இதை அவர் தெரிந்து, அர்த்தம் புரிந்து தான் பேசினாரா என தெரியவில்லை. சாதாரண கண்டக்டராக இருந்து சினிமாவை கனவாக நினைத்து சென்னை வந்த சிவாஜி ராவ் பட்ட கஷ்டங்கள் அதிகம், போட்ட உழைப்புகள் அதிகம்.

அதனால் தான் அந்த சிவாஜி ராவ் இன்று சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். அவர் கஷ்டப்பட்டு உழைத்து மேலே வந்ததும், இவர் நயன்தாராவை காதலித்து கல்யாணம் பண்ணதும் எப்படி சரிசமமாக முடியும். ஓவரா பண்ணுங்க சரி ஆனா ரொம்ப ஓவரா பண்ணாதீங்க விக்னேஷ் சிவன் என தற்போது இணையவாசிகள் அவரை கண்டித்து வருகிறார்கள்.

Trending News