வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய் ரசிகர்களிடம் ஏழரை இழுத்த சூர்யா உறவினர்.. பொளந்துகட்டும் நெட்டிசன்கள்.. இதெல்லாம் தேவையா?

தமிழ்நாட்டில் தல தளபதி சண்டையெல்லாம் போயி, தற்போது அடிக்கடி விஜய் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் தான் மோதிக்கொண்டு வருகிறார்கள். இதில் இடையில் புகுந்த சூர்யா ரசிகர்களும், “நாங்களும் இருக்கோம்..” என்று காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். சூழ்நிலை இப்படி இருக்க, தற்போது நடிகர் சூர்யாவின் உறவினர் ஒருவர் வான்டட் ஆக சென்று விஜய் ரசிகர்களிடம் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாரும் இல்லை..தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தான். இவர் தற்போது தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் இருக்கிறார். சமீபத்தில் கூட, அடுத்த வெற்றி படத்தை கொடுப்பதற்காக தனது ஆபீஸ்-ல் 16 மணி நேரம் உழைக்கிறார் என்ற செய்தியெல்லாம் வெளியானது. ஆனால் இப்போது என்னடா என்றால், தொண்டை தண்ணி வற்றும் அளவிற்க்கு சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்.

ஆனால் இவருக்கு இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பிகில் படம் வெளியானபோதும் இப்படி தான் தேவை இல்லாமல் ட்வீட் ஒன்றை போட்டு வம்பை விலைகொடுத்து வாங்கினார். அந்த சமயத்தில் கைதி படம் வெளியாகி இருந்தது. ரசிகர் ஒருவர் கைதிக்கு டிக்கெட் எடுக்க சென்றபோது அவருக்கு தவறுதலாக பிகில் படத்துக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. இதை அந்த ரசிகர் மிகுந்த மனவருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

கொட்டு வாங்கும் சூர்யா உறவினர்

இதை தொடர்ந்து, எஸ்.ஆர் பிரபு, “உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு.. ஆனா அறிவு இல்லையே..” என்று ஒரு ட்வீட் போட, அது விஜய் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளரை தாறு மாறாக திட்டி தீர்த்துவிட்டார்கள்.

இந்த நிலையில், இப்போது கங்குவா படத்துக்கு வந்த விமர்சனத்தை தொடர்ந்து, எந்த யூட்யூப் சேனலும் review ஒரு வாரத்திற்கு பண்ண கூடாது, பப்ளிக் review எடுக்க கூடாது உள்ளிட்ட ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள், “நடிகர் சூர்யாவின் உறவினர் தான் இந்த எஸ்.ஆர் பிரபு.. அதனால் தான் இத்தனை படங்களுக்கு இல்லாமல் இப்போது மட்டும் அறிக்கை வெளியாகி உள்ளது. உண்மையில் அக்கறை இருந்தால் அனைத்து நல்ல படங்களுக்காக இவர் குரல் கொடுத்திருக்க வேண்டுமே… ஏன் கொடுக்கவில்லை ? ” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எஸ்.ஆர். பிரபு இதை கண்டும் காணாமல் போயிருக்கலாம்.. அனால் ஒவ்வொருவருக்கும் தேவை இல்லாமல் பதிலளித்து தனது நேரத்தை வீணடித்து கொண்டிருக்கிறார். சூர்யா படத்திற்கு வந்த விமர்சனத்தை அவரே ஏற்றுக்கொள்ள பழகிக்கொண்ட நேரத்தில் குறுக்கே வந்த கொசு போல, ஆளுக்கு ஒரு வேலைய பார்த்து கொண்டு சூர்யாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.

Trending News