Mahanadhi serial: இப்போது சீரியல் எடுக்கும் இயக்குனர்களுக்கு எல்லாம் கற்பனை வளம் தீர்ந்து விட்டதா என்ன தெரியவில்லை. சினிமா படங்களின் கதையை அப்படியே கொஞ்சம் உல்டா பண்ணி சீரியலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குடும்பம், அந்த குடும்பத்திற்காக கஷ்டப்படும் ஒரு கதாநாயகி அவளை சுற்றி நடக்கும் கதை இதுதான் அப்போதைய சீரியலின் கதையாக இருக்கும். ஆனால் இப்போ வரும் சீரியல்களை எல்லாம் ஒரு ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தாலே தெரிந்து விடும் இது இந்த படத்தின் கதை என்று.
அப்படித்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மகாநதி சீரியலும் இந்த லிஸ்டில் சேர்ந்து இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் அப்பா இல்லாமல் 4 பெண்களை ஒரு பெண் எப்படி வளர்க்கிறாள் என்ற கண்ணோட்டத்தில் இந்த கதையை நகரும் என எதிர்பார்க்கப்பட்டது.
போதும்டா சாமி, முடியல!
இப்போது பெண்கள் எல்லாம் வளர்ந்து திருமணம் ஆகி அவர்கள் குடும்பத்தில் நடக்கும் கஷ்டத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அதிலும் காண்ட்ராக்ட்காக விஜயை திருமணம் செய்து கொள்ளும் காவேரி எல்லாம் வேற லெவல்.
இதை படிக்கும் பொழுதே என்ன இது பிரியமானவளே கதை மாதிரில்ல இருக்குது என தோன்றலாம். கதை மாதிரி எல்லாம் இல்லை அந்த கதையை தான் அப்படியே சுட்டு வைத்திருக்கிறார்கள். கல்யாணம் பண்ணி விட்டு வந்திருக்கிறோம் என ஒருவரை ஒருவர் விலகி நின்றாலும், இப்போது இவர்களுக்குள் ஒரு காதல் ட்ராக் ஆரம்பித்துவிட்டது.
சரி நல்லா போய்க்கிட்டு இருக்குதுன்னு பார்த்தா திடீரென இயக்குனருக்கு சில்லுனு ஒரு காதல் படம் ஞாபகம் வந்திருக்கும் போல. காண்ட்ராக்ட் புருஷனுக்கு பிறந்தநாள் வரவும் என்ன பரிசு தருவது என தெரியாமல் புலம்புகிறாள் காவேரி.
உலகத்திலேயே யாரும் கொடுக்காத பரிசாக இருக்க வேண்டும் என நினைத்து கணவனின் முன்னாள் காதலியை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறாள். இதில் என்ன கூத்து என்றால் என்னுடைய பிறந்தநாள் அன்று காண்ட்ராக்ட் பேப்பரை கிழித்துப் போட்டுவிட்டு காவிரியுடன் சேரப் போகிறேன் என விஜய் சொல்லி இருந்தான். ஆனால் காவேரி அதிமேதாவி தனமாக சில்லுனு ஒரு காதல் படத்தில் வரும் ஜோதிகாவை மிஞ்சும் அளவுக்கு இந்த விஷயத்தை பண்ணியிருக்கிறார்.