Vijay: நடிகர்கள் அரசியலுக்கு வந்த பின்னாடி எதிர்கொள்ள வேண்டிய பெரிய சிக்கல் ஒன்று இருக்கிறது. சினிமா வேறு அரசியல் வேறு என்று பார்க்காமல் அந்த நடிகர்கள் நடித்த படங்களின் சில காட்சிகளை சுட்டிக்காட்டி இவரா நாட்டை திருத்தப் போகிறார் என்று அசால்டா கேட்டுருவாங்க.
அப்படித்தான் விஜய் தற்போது ஒரு விஷயத்தில் சிக்கி இருக்கிறார். நேற்று கிண்டி கலைஞர் மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் மகன் தன் அம்மாவுக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி டாக்டர் ஒருவரை கத்தியால் தாக்கினார்.
கண்டம் தெரிவித்த விஜய்
டாக்டர் சிகிச்சை பெற கத்தியால் குத்தியவர் தற்போது 15 நாட்கள் ரிமேண்டில் இருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக மருத்துவர்கள் சங்கம் காலை 10 மணி வரை போராட்டம் நடத்தினார்கள். மேலும் அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜயும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம்.
கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவுக்கு பின்னால் விஜய் நடித்த போக்கிரி படத்தின் ஒரு காட்சி பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் அசின் உடன் ஒரு மருத்துவமனைக்கு செல்வது போலவும் அங்கு திமிராக பேசும் டாக்டரை ஆப்ரேஷன் செய்யும் கத்தியால் தாக்குவது போலவும் கூட்டத்தில் அவரை தடுக்க வருபவர்களை அந்த கத்தியை கொண்டே மிரட்டுவது போலவும் அந்த காட்சி இருக்கிறது.
நீங்கள் சினிமாவில் செய்வதை தான் இளைஞர்கள் பார்த்துவிட்டு நேரில் செய்கிறார்கள் இனியாவது இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்காதீர்கள் என இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் சினிமா வேறு, அரசியல் வேறு அவர் அரசியல் தலைவராக கருத்து கூறும் போது எதற்காக சினிமாவை உள்ளே இழுக்க வேண்டும் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.