தனுஷ் நயன்தாரா விவகாரத்தில், பொறியில் சிக்கிய எலி போல துடித்துக்கொண்டு இருப்பது இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் தான். அவரை நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் கிடைக்கும் எல்லா வாய்ப்பிலும் ட்ரோல் செய்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் இயக்கம் பொதுவாக நன்றாக தான் இருக்கும்.
ஆனால் தனுஷ் பிரச்சனையில் தேவை இல்லாமல் விக்னேஷ் சிவன் தலையிட்டு வாழு வாழ விடு என்றெல்லாம் ஸ்டோரி போட்டது, தனுஷ் ரசிகர்களிடையே கடுப்பை ஏற்றியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த ஒரு பேட்டி வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவனை கலாய்க்கும் நெட்டிசன்கள்
அந்த பேட்டியில், “நான் லைக்காவிடம் கதை சொன்னேன். ஆனால் அவர்களுக்கு படம் தயாரிப்பதில் விருப்பமில்லை” என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள், இதை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில் அதிக Flop-களை கொடுத்த ஒரு நிறுவனமாக லைக்கா உள்ளது. தொடர் தோல்வியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவனின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், “இந்தியன் 2, லால் ஸலாம் போன்ற மொக்க படம் எடுத்தவங்களுக்கே உங்கள் கதை பிடிக்கவில்லை என்றால்.. எப்பேர்ப்பட்ட கதையை சொல்லி இருப்பீர்கள்…” என்று நக்கல் செய்து வருகின்றனர்.
மொத்தத்தில் இதையெல்லாம் பார்க்கும்போது விக்னேஷ் சிவனுக்கு நாக்கில் சனி என்று தான் கூறவேண்டும்.. சிவனே என்று இருந்திருந்தால் இப்படி வெறுப்புக்கு உள்ளாகி இருப்பீர்களா என்று பலரும் கேட்டு வருகின்றனர். இதையெல்லாம் பிரதீப் ரங்கநாதனின் படத்தை வைத்து தான் இவர் முறியடிக்க வேண்டும்.