Ajith: அஜித்தை பொருத்தவரை யார் என்ன சொன்னாலும் என்னுடைய இஷ்டப்படி எனக்கு தோணுவது தான் நான் செய்வேன் என்று மெத்தனத்தில் இருக்கக்கூடியவர். அதனால் தான் ரசிகர்கள் எப்படி புலம்பித் தவித்தாலும் எனக்கு கவலை இல்லை என்று அசால்டாக நடிக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு துணிவு வெளிவந்ததையொட்டி இப்பொழுது வரை எந்த படங்களும் வெளிவரவில்லை.
இன்னும் சொல்லப்போனால் அஜித்தின் பிறந்தநாளுக்கு ஏதாவது போஸ்டர்களை வெளியிடுவார்கள் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் படம் சம்பந்தமாக எந்த ஒரு அப்டேட்டுகளையும் வெளிவிடாமல் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள். இருந்தாலும் அஜித் படம் எப்பொழுது வரும் திரையரங்குகளில் எப்பொழுது அவரை பார்த்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அஜித்தோ, போகிற இடங்களில் எடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு நானும் இருக்கிறேன் என்று அவ்வப்போது காட்டிக் கொள்கிறார். அந்த வகையில் தற்போது சென்னையில் உள்ள டர்ப் கிரவுண்டில் இவருடைய மகன் ஆத்விக் மற்றும் அவரது நண்பர்களுடன் அஜித் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது.
கையில் ரெண்டு படத்தை வச்சுட்டு தள்ளாடும் அஜித்
மேலும் அஜித் இந்த புகைப்படத்தை பப்ளிசிட்டி செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் வழக்கம்போல் இந்த புகைப்படத்தை பப்ளிசிட்டி செய்துவிட்டு இதுதான் தலயின் எளிமை என்று அஜித்தை பங்கமாக கலாய்த்து ப்ளூ சட்டை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இவருடைய பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் காண்டாகி பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
அவர் என்ன பண்ண உனக்கு என்ன, அவர நோன்றதே உனக்கு வேலையா? அவர வச்சு பதிவு போட்டு நீ பப்ளிசிட்டி தேடுறியா என்று ப்ளூ சட்டை மாறனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு தயாராகி விட்டோம் என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.
மகனுடன் கிரிக்கெட் விளையாடும் அஜித்
ஆனால் இன்னும் மீதமுள்ள 10% படப்பிடிப்பு பாக்கி இருக்கும் இந்த நிலையில் அஜித் இந்த மாதிரியான விஷயங்களை செய்வதை பார்த்து விடாமுயற்சி படத்தின் தயாரிப்பாளர் லைக்கா செம கடுப்பில் இருக்கிறார். அந்த வகையில் அஜித் அசால்டாக எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆக்குவதை பார்த்து இன்னும் வைத்தெரிச்சலில் கொந்தளிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கமிட் ஆகிய குட் பேட் அக்லி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் அடுத்த கட்ட ஷூட்டிங்காக நாளை மொத்த குழுவும் அஜர்பைஜான் போவதற்கு தயாராக உள்ளார்கள். மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்பதால் மொத்த குழுவும் மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
அஜித்தை கலாய்த்து ப்ளூ சட்டை போட்ட பதிவு
ஆனால் அஜித் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதன் கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட விடாமுயற்சி படம் இன்னும் விடிவு காலம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் குட் பேட் அக்லி படப்பிடிப்புக்கு எந்த அளவுக்கு அஜித் அலைய வைக்கப் போகிறாரோ என்று இப்படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வயிற்றில் நெருப்பை கட்டிட்டு இருக்கிறார்.
அஜித் நடிப்பில் உருவாகி தரும் படங்களின் அப்டேட்
- குட் பேட் அக்ளி படத்திற்கு ஆரம்பமே செய்யப்பட்ட சூழ்ச்சி
- Ajith: விடா முயற்சிய ஆண்டவன் தான் காப்பாத்தணும்
- Ajithkumar: உறுதியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் ரிலீஸ் தேதி