விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. இதில் எல்லா சீசன்களிலுமே கண்டிப்பாக காதல் டிராக் இடம் பெறும். கடந்த சீசனில் கூட அமிர், பாவனி இருவரின் காதல் ட்ராக் ஒளிபரப்பாகி வந்தது.
தற்போது இவர்கள் நிஜமாகவே திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதேபோல் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் காதல் ட்ராக் வரும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது பல சித்து வேலைகளை செய்து வருகிறார் அசல்.
Also Read :பிக் பாஸ் சீசன் 6 முதல் தலைவர் இவர்தான்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு
அதாவது அவர் பெண்களிடம் பழகும் விதம் மோசமாக இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அடிக்கடி குயின்சியை தேவை இல்லாமல் வம்பிழுத்து வருகிறார். இவரை மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டில் உள்ள பல பெண்களிடம் அசல் தேவையில்லாமல் அசட்டு வழிவது போல் தெரிகிறது.
குயின்சி மற்றும் நிவாஷினி இடம் பேசும் போது வெளியில் எனக்கு பெண் நண்பர்கள் மற்றும் காதலி கிடையாது என்று அப்பாவி போல் பேசுகிறார். இவ்வாறு பேசும்போதே சில சமயங்களில் பெண்களை தடவிக் கொண்டிருக்கிறார். இது பார்ப்போர்க்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது.\
Also Read :பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த முதல் காதல்.. 2 பேருக்கு ரூட் போடும் சக போட்டியாளர்
அந்தப் புகைப்படங்களை நெட்டிசன்கள் இணையத்தில் வெளியிட்ட தாறுமாறாக ட்ரோல் செய்து வருகிறார்கள். அசல் பிக் பாஸ் சென்றதற்கு காரணமே இதுதானா என பலரும் விளாசி எடுக்கிறார்கள். மேலும் அசல் இவ்வாறு செய்வது குயின்சிக்கு எரிச்சல் அடையச் செய்கிறது.
அசலின் காதல் லீலை
பிக் பாஸ் தொடங்கிய ஒரு வாரத்திலேயே அசல் இவ்வளவு மன்மத வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் போகப் போக என்னென்ன சித்து வேலைகள் செய்ய இருக்கிறாரோ. கண்டிப்பாக அசல் மூலம் பிக் பாஸ் மீம்ஸ் கிரியேட்டருக்கு நிறைய கண்டன்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.
அசல் செய்யும் சித்து வேலைகள்
Also Read :பிக்பாஸ்- 6 முதல்வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. வெளியேறும் சிடு மூஞ்சி போட்டியாளர்