திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

இரண்டே படத்தில் 39 கோடியில் வீடு வாங்கிய பிரபல நடிகை.. அசுர வளர்ச்சியை பார்த்து வாயை பிளக்கும் திரையுலகம்!

தமிழ் சினிமாவில் மங்காத புகழ் கொண்ட ஸ்ரீதேவி மற்றும் முன்னணி தயாரிப்பாளரான போனிகபூர் ஆகியோரின் மகள் தான் ஜான்வி கபூர். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து ஜான்வி, ‘கோஸ்ட் ஸ்டோரீஸ்’ மற்றும் ‘குஞ்சன்  சக்சேனா: தி கார்கில் கேர்ள்’ ஆகியவற்றில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஜான்வி கபூர் கலிபோர்னியாவில் உள்ள லி ஸ்டார்ஸ்பர்க் தியேட்டர் மற்றும் இன்ஸ்டிடியூட்டில் தனது நடிப்பு கலையை பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜான்வியின் கைவசம் ‘ரூஹி அப்சனா’ மற்றும் ‘தோஸ்தானா 2’ ஆகிய படங்கள் உள்ளன.

இந்நிலையில் ஜான்வி கபூர் மும்பையில் புதியதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது ஜான்வி கபூருக்கு 23 வயதுதான் ஆகிறது. ஆனாலும் இந்த சிறு வயதிலேயே ஜான்வி கபூர் 39 கோடி ரூபாய்க்கு மூன்று அடுக்கு மாடி பங்களா வீட்டை தனது சொந்த காசில் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் வாங்கி உள்ளாராம்.

அதேபோல் கடந்த வருடமே இந்த வீட்டிற்கான பேச்சுவார்த்தை முடிக்கபட்டதாகவும், ஸ்டாம்ப் டியூட்டிகாக 78 லட்சம் ரூபாய் கடந்த வருடமே கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

keerthy suresh jhanavi kapoor

எனவே, இந்த சிறு வயதிலேயே ஜான்வி கபூர் சொந்தமாக வீடு வாங்கும் அளவிற்கு வளர்ந்திருப்பதை பார்த்த பலர், அவருக்கு சமூக வலைத் தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News