ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

தளபதி 66 படத்தில் இணைந்த பிதாமகன் பட நடிகை.. ஒருவேளை அவருக்கு ஜோடியா இருக்குமோ!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், விஜய் தன்னுடைய அசுர வளர்ச்சியும் அவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மூலம் படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கிறார்.

தளபதி 66 படத்தில் பிரபு, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, ஷாம், பிரகாஷ்ராஜ், நடிகை ஜெயசுதா உட்பட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான அகண்டா(Akhanda) படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான ஸ்ரீகாந்த் என்னும் தெலுங்கு நடிகர் தற்போது தளபதி 66 படத்தில் நடிக்க உள்ளார்.

இவரைத் தொடர்ந்து மற்றொரு பிரபலமும் இந்தப் படத்தில் இணைகிறார். நீண்ட நாட்களாக நடிகை சங்கீதா விஜய்யுடன் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். பல வருடத்திற்கு பிறகு தற்போது தளபதி 66 படத்தில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதைத்தவிர உயிர், பிதாமகன், தனம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர். இவர் இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்திற்குப் பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தளபதி 66 படத்தின் படக்குழு சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த படம் வருகிற 2023-ஆம் ஆண்டு பொங்கல் அன்று திரையிடப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் தளபதியை இயக்குவது மட்டுமில்லாமல் வரிசையாக தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்களும் அவருடன் இணைந்து புது கம்போ உடன் உருவாகிறது.

இருந்தபோதிலும் தளபதியின் 66வது படம் நிச்சயம் படக்குழு சொன்னதுபோல் சென்டிமெண்ட் படமாகவே மாஸ் ஹீரோவை வைத்து அமைந்தால் சந்தோசம். ஆனால் அதை தவிர தெலுங்கு வாடை அதிகம் வீசுமோ என்ற பயமும் தளபதி ரசிகர்களுக்கு இருக்கிறது.

Trending News