வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிவகார்த்திகேயனுக்கு முளைத்த புது விரோதி.. காக்கா கழுகு ஓய்ந்தபின் கொத்திட்டு போன ஹீரோ

அடேங்கப்பா ஒரு காலத்தில் இந்த காக்கா கழுகு சண்டைக்கு, ஒரு எண்டு கிடையாதா என வெறுத்து சமூக வலைத்தளங்களில் இருந்து ஓடியவர்கள் பல பேர்.ஜெய்லர் ஆடியோ லாஞ்சில் ரஜினி சொன்ன கதையால் விஜய் ரசிகர்கள் மொத்தமாய் ரஜினிக்கு எதிராக திரும்பினார்கள்.

அதிலிருந்து ரஜினிக்கு போட்டி விஜய் தான் என்று ஒரு பிரளயமே உண்டானது. இந்த கதை ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் லியோ சக்சஸ் மீட்டில் விஜய், தமிழ்நாட்டில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ரஜினி, விஜய் போலவே இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கும் மற்றும் ஒரு ஹீரோவுக்கும் உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. அவருக்கும் ஒரு ஹீரோ போட்டியாக கிளம்பி விட்டார். சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் அமரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இது சக நடிகர்களுக்கு சிவா மீது பொறாமை கலந்த பயத்தை உண்டாக்கியுள்ளது.

அதாவது விஜய், ரஜினிக்கு போட்டியாக கிளம்பிய உடன் ரஜினிகாந்த், விஜய் படம் பண்ணிய இயக்குனர்களை எல்லாம் அழைத்து வாய்ப்புகள் கொடுத்து தன் படங்களையும் சூப்பர் ஹிட் ஆக்கினார். இப்பொழுது ரஜினி போலவே சிவகார்த்திகேயன் படம் பண்ணிய இயக்குனர்களை குறி வைக்கிறார் தனுஷ்.

அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் பண்ண போகிறார். இது கலைப்புலி எஸ் தானு அல்லது மதுரை அன்புச்செழியன் ஆகியோர்களது கூட்டணியில் உருவாகப் போகிறது. ஏற்கனவே அன்பு செழியன் ராஜ்குமாருக்கு ஒரு பெருந்தொகையை அட்வான்ஸாக கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் இந்த கூட்டணி உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News