Actor Vijay: தன்னுடைய முயற்சியால் பிரபலங்களை வைத்த அடுத்தடுத்து இயக்கும் படங்களில் வெற்றி கண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். மேலும் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் லியோ. தற்பொழுது இப்படத்தின் டைட்டிலைக் குறித்து புது தலைவலியாக பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் தளபதி 67 என்ற டைட்டிலில் இருந்து வந்த நிலையில் அதன் பின் இப்படத்தின் அப்டேட் ஆக லியோ என்ற பெயரை அறிவித்தனர். லியோ என்றாலே நம் நினைவுக்கு வருவது காபி நிறுவனம் தான். அவ்வாறு இருக்கையில் ஏன் இப்பெயரை படத்திற்கு வைத்தார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஆனால் இப்படத்தின் ப்ரோமோவில் விஜய் கோகோ கொட்டைகளை கொண்டு சாக்லேட் தயாரிப்பது போன்றும். மேலும் ஒரு பக்கம் கத்தியை உருவாக்கி அவற்றை சாக்லேட் க்ரீமுக்குள் நனைப்பது போன்றும் காட்டப்பட்டிருக்கும். இவை ரசிகர்கள் இடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட ப்ரோமோவை போலவே இப்படத்திலும் விஜய்யை வைத்து பக்கா மாஸ் காட்டியிருப்பார். அவ்வாறு இருக்கையில் இப்படத்தின் டைட்டிலுக்கு எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது லியோ காபி நிறுவனம்.
Also Read: என்னது சரத் பாபு நடித்த கடைசி படம் போர் தொழிலா.? அதிர்ச்சியில் உறைய வைத்த கதாபாத்திரம்
இவ்வாறு நிறுவனத்திடம் எந்த ஒரு உரிமமும் பெறாமல் இவர்கள் வைத்த பெயரின் மூலம் படத்திற்கு ஃப்ரீ ப்ரொமோஷன் செய்து வருகின்றனர். இது ஒரு பக்கம் பிரச்சனை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் படத்தின் பப்ளிசிட்டிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
மேலும் இத்தகைய பெயர் மக்களிடையே எளிதாக சென்றடையும் என்பதற்காகவும் பிளான் போட்டு செய்ததாக இருந்து வருகிறது. இருப்பினும் லியோ பெயரில் ஏற்கனவே காபி நிறுவனம் இருப்பதால் இதில் காப்பிரைட் பிரச்சனை வருமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழ தொடங்கி உள்ளது.