ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

விஜய் சேதுபதி இடத்தில் இவர்தான் இருக்க வேண்டியது.. அப்படியே உல்டாவாக மாற்றிய மக்கள் செல்வன்

நடிகர் இனிகோ பார்ப்பதற்கு 100 சதவீத ஹீரோ மெட்டீரியல்தான். அழகர்சாமியின் குதிரை, சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் இனிகோவின் இனிஷியலை ஊருக்கு சொன்னப்படங்கள்! ஆனால் இப்பவும் வெற்றி இதோ அதோ என்று பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறது.

இனிகோவின் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வந்த சீனுராமசாமியின் பேச்சில் செம டச் ‘இனிகோ பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனுக்காகதான் நான் இங்கு வந்தேன். இப்போது இருக்கிற முன்னணி ஹீரோக்களுக்கு நிகரானவன்தான் தம்பி. வருங்காலத்தில் எனக்கும் இனிகோவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நிச்சயம் நடக்கும்” என்றார்.

vijaysethupathy inigo prabhakaran

உண்மையில், சீனு ராமசாமி இயக்கிய படங்களில் இனிகோதான் ஹீரோவாக நடிக்க வேண்டியிருந்ததாம். விஜய்சேதுபதியின் முதல் படமான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் இவரைதான் நடிக்க அழைத்திருக்கிறார் சீனு.

அப்போது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்துக் கொண்டிருந்த காரணத்தால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கப்புறம் வந்த மூன்று படங்களிலும் என்னால் நடிக்க முடியாமல் போனதற்கு வேறு வேறு காரணங்கள் உண்டு என்றார் இனிகோ.

அந்த வேறுவேறு காரணங்களுக்கு காரணம், விஜய்சேதுபதிதான் என்று விழாவுக்கு வந்திருந்த சிலர் முணுமுணுப்பதை கேட்க முடிந்தது.

Trending News