நட்சத்திர தம்பதிகளான தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய 18 ஆண்டு கால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தனர். அதிலிருந்து பல மாதங்களாக இவர்கள் இருவரை பற்றி ஏகப்பட்ட செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் தங்கள் விவாகரத்து முடிவை கைவிட்டு மீண்டும் இணையாய் இருப்பதாக செய்திகள் பரவியது. விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.
Also read:அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியானது. தற்போது அவரின் நடிப்பில் வாத்தி திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று ஐஸ்வர்யாவும் ஆல்பம் பாடல் போன்றவற்றில் கவனத்தை திருப்பினார்.
இப்படி இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருந்தாலும் குழந்தைகளையும் கவனித்து வந்தனர். அந்த வகையில் தனுஷ் தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தன் இரு மகன்களையும் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதேபோன்று ஐஸ்வர்யாவும் தன் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்கள் அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் தங்கள் மகனின் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் இணைந்து விட்டதாக கூறப்பட்டது. அது தற்போது உண்மையாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளுக்காக மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்து இருக்கின்றனர்.
Also read:மணிரத்னத்தை விடாமல் துரத்தும் தனுஷ்.. காயப்பட்ட சிங்கம், திருப்பி அடிக்க நாள் குறிச்சாச்சு தலைவரே!
அது வகையில் தனுஷ் தற்போது பிரம்மாண்டமாக கட்டிக் கொண்டிருக்கும் வீட்டில் தான் இந்த ஜோடி தங்கள் புது வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கின்றனர். தனுஷ் போயஸ் கார்டனில் தன் மாமனார் ரஜினியின் வீட்டுக்கு அருகிலேயே மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதன் பணிகள் தற்போது முடிவு வரும் நிலையில் இருக்கிறது. அதனால் ஜனவரி மாதத்திற்குள் இந்த ஜோடி புது வீட்டில் புது வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டுள்ளனர். கடந்த வருடம் ஜனவரி மாதம் தங்கள் விவாகரத்தை அறிவித்த இவர்கள் இந்த ஜனவரி மாதத்தில் தாங்கள் இணையும் செய்தியையும் அறிவிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Also read:தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?