வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டான் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. படக்குழுவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் டான். இப்படத்தை 50 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்சன் மற்றும் லைகா புரோடக்சன் இணைந்து தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் நல்ல வசூல் ஈட்டிய நிலையில் டான் படத்திலும் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக நடித்து இருப்பது பலராலும் வரவேற்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டான் படம் திரையரங்குகளில் வெளியான நேரத்திலேயே இணையத்திலும் லீக் ஆகியுள்ளது. இதை பார்த்த படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சமீபகாலமாக புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான உடனே இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்து வருகிறது.

ஒரு படம் உருவாவதற்கு தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள், நடிகைகள், கேமராமேன் என அனைவரும் தங்களது கடின உழைப்பை போட்டு எடுக்கிறார்கள். மேலும் ஒரு படம் எடுப்பதற்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு ஆகிவிடுகிறது.

ஆனால் சிலர் இது போன்ற படங்களை திருடி இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர். மக்களும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்ப்பதை காட்டிலும் கையில் இருக்கும் மொபைல் போனிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் அவர்களுக்கு வந்துவிடுகிறது.

இதனால் தயாரிப்பாளர் முதல் படத்தில் பணியாற்றிய பலரும் பாதிக்கின்றனர். தற்போது இதே சிக்கலை சந்தித்துள்ளது டான் படக்குழுவும். இதனால் இப்படத்தை இணையத்தில் பார்க்காமல் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கும்படி ரசிகர்களுக்கு படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending News