மோஸ்ட் வான்டெட் அம்மா நடிகையாக மாறிய ஹீரோயின்.. ராதிகா, சரண்யா போல் கொண்டாடப்படும் நடிகை

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அம்மா வேடங்கள் என்றால் ராதிகா, சரண்யா, பானுப்பிரியா என மூன்று ஹீரோயின்கள் தான். இப்பொழுது இவர்களை பெரும்பாலும் படத்தில் பார்க்க முடியவில்லை. இவர்கள் சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு வாழ்க்கையை நோக்கி சென்றுவிட்டார்கள்.

அம்மா கேரக்டர்களுக்கு தமிழ் சினிமா திணறி வந்த நிலையில் இப்பொழுது புதியதாய் ஒரு ஹீரோயினை பிடித்து விட்டார்கள். கைவசம் அம்மா கதாபாத்திரம் மட்டுமே 6 படங்கள் வைத்திருக்கிறார். இவர் நடித்த அம்மா கதாபாத்திரங்கள் படமும் பட்டாசு போல் தெரிக்கிறது.

இப்பொழுது தக்லைஃப், வேட்டையன் என பெரிய படங்கள் அனைத்திலும் கமிட்டாகி வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே கமல் இந்த நடிகையை விட்டுக் கொடுக்கவே மாட்டார். இப்பொழுதும் அதேபோல் தக்லைப் படத்திலும் வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறார்.

ராதிகா, சரண்யா போல் கொண்டாடப்படும் நடிகை

2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். அதன் பின்பு பத்து வருடங்கள் கழித்து 2015ஆம் ஆண்டு தான் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இப்பொழுது வெளிவரும் படங்களில் எல்லாம் அம்மா கதாபாத்திரம் என்றால் இந்த நடிகை தான். வேற லெவலில் பட்டையை கிளப்புகிறார். சமீபத்தில் வெளிவந்த மகாராஜா படத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கமலின் கனவு படமான விருமாண்டி படத்தில் நடித்தவர் அபிராமி. அந்தப் படத்தில் கமலுக்கு நிகராக நடிப்பில் பேசப்பட்டவர். இந்த படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போய்விட்டார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தில் தான் மீண்டும் நடிக்க வந்தார். இவர் தான் இப்பொழுது அம்மா கேரக்டரில் தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்.