ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்து அழகு பார்த்த ஜிவி பிரகாஷ் படக்குழு.. குவியும் பாராட்டு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சீனுராமசாமி தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியுள்ளார். இவரது படங்கள் எதார்த்தமாகவும், மண்வாசனை சார்ந்த கிராமத்து கதையாகவும் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை மென்மையான படங்களை மட்டுமே இயக்கி வந்த சீனுராமசாமி தற்போது முதன்முறையாக ஆக்சன் படம் ஒன்றை இயக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு இடிமுழக்கம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக கலைமகன் முபாரக் தயாரிக்கிறார். இது இவருடைய இரண்டாவது தயாரிப்பாகும். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிடுவார் என வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் அவருக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் புதிய பட்டம் ஒன்றை வழங்கியுள்ளது.

udyanidhi-stalin
udyanidhi-stalin

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் பல்வேறு புரட்சிகளை செய்து வருவதால் அவருக்கு மக்கள் அன்பன் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பட்டம் வைத்துள்ளது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Trending News