கொரோனாவால் பெரிய பெரிய தியேட்டர்கள் மற்றும் மால்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. எந்த ஒரு முன்னணி நடிகரின் சினிமா படங்களும் வெளியிட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஓடிடி-தளம் மட்டும் தான் ஒரே வழி என்பதால் அதில் தங்கள் படங்களை வெளியிட்டு அது சர்ச்சையிலும் முடிந்துள்ளது. இதனை அறிந்த ஓடிடி தள முதலாளிகள் அடிமாட்டு ரேஞ்சுக்கு டீல் பேசி படங்களை வாங்கி விடுகிறார்கள்.
தற்போது பிரபலமாக இருக்கும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் முன்னணி நடிகர்கள் படங்கள் மற்றும் வெப் சீரியல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இப்படியிருக்க இவர்களுக்கு போட்டியாக சோனி லைவ் ஓடிடி தளத்தை வெளியிட உள்ளது.
இந்த மாதம் 25ஆம் தேதி இந்த ஓடிடி தளம் தொடங்க உள்ளதாகவும் முதல் முறையாக விமர்சன ரீதியாக வெற்றி கண்ட தேன் என்ற படத்தை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி மற்றும் அரவிந்த் சாமியின் நரகாசுரன் போன்ற படங்களையும் கைப்பற்றியுள்ள சோனி லைவ் வரும் ஜூலை மாதம் இந்த படங்களையும் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
வரும் காலங்களில் மக்கள் தியேட்டருக்கு செல்லும் பயம் எப்போதும் குறைகிறதோ அப்போது தான் முன்னணி நடிகர்களின் படத்தை தியட்டரில் பார்க்க முடியும் அது வரை ஓடிடி தளம் கதி என கிடைக்க வேண்டும்.