வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார் போல.. கோவிலுக்குள் முத்தம், ஆதிபுருஷால் வெடிக்கும் சர்ச்சை

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஆதிபுருஷ். கடந்த சில நாட்களாகவே இணையத்தில் இந்தப் படத்தைப் பற்றி விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதாவது ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மட்டும் மையமாக வைத்து இயக்குனர் இப்படத்தை எடுத்துள்ளார்.

இதில் பிரபாஸ் ராமராகவும், சைப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் சீதா தேவியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் ஒரு இருக்கை மட்டும் ஆஞ்சநேயருக்காக விடப்படும் என படக்குழு அறிவித்திருந்தனர். இதைக் கேட்டு ரசிகர்கள் கிண்டல் செய்திருந்தனர்.

Also Read : இப்படி எல்லாம் விளம்பரப்படுத்தினா படம் ஓடுமா.? தியேட்டரில் சீட்டு ஒதுக்கிய ஆதிபுருஷ் பிரபாஸ்

இந்நிலையில் வருகின்ற ஜூலை 16ஆம் தேதி ஐந்து மொழிகளில் ஆதிபுருஷ் படம் வெளியாக இருக்கிறது. இதற்காக சமீபத்தில் திருப்பதியில் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் ஆதிபுருஷ் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் பெற்றுள்ளனர்.

அப்போதுதான் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக ஆதிபுருஷ் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. அதாவது கோயிலில் தரிசனம் பெற்று வந்த கீர்த்தி சினோன் காரில் ஏறும்போது இயக்குனர் ஓம் ராவத் நடிகை அழைத்து கோயிலுக்குள் கட்டியணைத்து முத்தமிட்டார்.

Also Read : அதர்மத்தை கூண்டோடு வேரறுக்க வரும் ஆதிபுருஷ் கடைசி ட்ரெய்லர்.. பயத்துடன் வெளியிட்ட பிரபாஸ்

இந்த வீடியோ இப்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டதாக இயக்குனர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் பாஜக தலைவர்களும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆகையால் ஆதிபுருஷ் படம் இப்போது ரிலீஸ் ஆகுமா என்ற நிலை இயக்குனரால் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு முட்டுக்கட்டையாக ஏதோ ஒரு விஷயம் வந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போது படத்தின் இயக்குனரால் இவ்வளவு பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதிபுருஷ் படக்குழு.

adipurush
adipurush

Also Read : ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ் ட்ரெய்லர்

Trending News