Actor Dhanush: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாத்தி திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படம் நல்லபடியாக வெற்றி அடைய வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால் எல்லா விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.
ஆனால் அந்த எண்ணத்தினால் தான் என்னவோ படம் ஆரம்பத்திலிருந்து சொதப்பிக்கொண்டே வருகிறது. அதாவது இந்த படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டபோது நிறைய இடையூறுகள் ஏற்பட்டது. மேலும் படப்பிடிப்பில் தனுசுக்கு சரியான மரியாதை இல்லை என்று ஆவேசத்துடன் சூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறினார்.
Also read: கலவரம் செஞ்சு வெற்றி பெற்ற 5 படங்கள்.. முதல் படத்திலேயே பூகம்பமான தனுஷ்
அடுத்ததாக தனுஷ் படப்பிடிப்புக்கு வந்து செல்வதற்கு ஒரு கார் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கும் இது என்ன இவ்வளவு மலிவான காரை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். வேறு ஏதும் நல்ல கார் இல்லையா என்று பிரச்சனை செய்திருக்கிறார்.
இவர் ஆரம்பித்த பிரச்சனை தற்போது சென்ற இடமெல்லாம் தொடர்ந்து கொண்டே வருகிறது.
அதாவது சொல்வார்களே முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகும் என்று. அது போல தான் கேப்டன் மில்லர் படத்தின் நிலைமை ஆகிவிட்டது. இந்த படத்தில் நிறைய குண்டு மற்றும் துப்பாக்கி காட்சிகள் இருப்பதால் அதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.
Also read: தப்பி பிழைத்த தனுஷ், சிவகார்த்திகேயன்.. ஒருமுறை பட்ட பாட்டால் உஷாரான உச்ச நட்சத்திரங்கள்
ஆனால் இப்படப்பிடிப்பின் போது குண்டு மற்றும் துப்பாக்கி சத்தம் இருப்பதால் அங்கு இருக்கும் மக்களை மிகவே அச்சுறுத்தியது. அதனால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இப்படியே போனால் தனுஷ் எதிர்பார்த்தபடி தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட முடியுமா என்பது சந்தேகம் தான்.
இதுவரை வந்த பிரச்சனை போதாது என்று தற்போது இயக்குனர் ஒரு குண்டை போட்டு விட்டார். அதாவது அவருக்கு கேப்டன் மில்லர் படத்தில் எடுத்த சில காட்சிகள் அந்த அளவுக்கு திருப்தி அளிக்கும்படியாக இல்லையாம். ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா இதற்கு என்னதான் முடிவு. கூடிய சீக்கிரத்தில் படத்தை எடுத்து முடித்துவிட்டு கடையை சாத்திட்டு போங்க.
Also read: அட இதுதான் சங்கதியா.? கேப்டன் மில்லருக்கு டாட்டா போட்டு மும்பையில் வட்டமிடும் தனுஷ்