வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாண்டி மாஸ்டர் ஹீரோவாக அவதரிக்கும் புது ரூட்.. ஏ ஆர் ரகுமான் இசையில் பிரம்மாண்டமான படம்

சாண்டி மாஸ்டர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் கலைஞர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தார். அதில் இருக்கும் போதே கலா மாஸ்டர் இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு இவருடைய பெர்பார்மன்ஸ் பக்கா மாஸாக இருந்தது. அப்பொழுது அவர் அடிக்கடி சொல்லும் ஒரே வார்த்தை நீ கூடிய விரைவில் சினிமா உலகத்துக்கு வருவாய் என்று தான்.

அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சினிமாவில் உள்ள ஹீரோகளுக்கு கொரியோகிராபராக வந்தார். பின்பு பிக் பாஸில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். அதை வைத்துக்கொண்டு பல பாடல்களுக்கும் ஹீரோகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து முன்னணி டான்ஸ் மாஸ்டராக வந்து விட்டார்.

Also read: மேடையில் மனைவிக்கு கண்டிஷன் போட்ட ஏ ஆர் ரகுமான்.. எந்த நட்சத்திரங்களும் செய்யாத விஷயம்

இந்த சமயத்தில் தற்போது இவர் புது ரூட்டை ஒன்றை ஃபாலோ செய்கிறார். அதாவது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் விஜய்யின் மகன் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு இயக்குனர் பெரிய அளவில் முயற்சி செய்து வந்தார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அதன் பின் அந்த கதையை வைத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக திடீரென்று டான்ஸ் மாஸ்டர் சாண்டியை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து பெரும் அதிர்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது. இன்னும் கூடுதல் அதிர்ச்சியை கொடுப்பது இந்த ஒரு விஷயம் தான். அதாவது உச்ச நட்சத்திரங்களுக்கு மட்டும் இசையமைக்கும் ஏ ஆர் ரகுமான் தற்போது இந்தப் படத்திற்கு இசையமைக்க போகிறார்.

Also read: தமிழ் தெரியாது போடா, மேடையில் அசிங்கப்பட்ட ஏ ஆர் ரகுமான்.. நச்சுனு கேள்வி கேட்ட கஸ்தூரி

அடுத்ததாக இந்த படத்தை தயாரிக்க இருப்பது ரோமியோ பிக்சர்ஸ். இந்த தயாரிப்பு நிறுவனம்தான் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது. அத்துடன் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கமே புதிதாக ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் நடிகர்களை தூக்கிவிடும் விதமாகத்தான் இருக்கிறது.

அத்துடன் இதற்கான விஷயங்களை இயக்குனர் ஒவ்வொன்றாக இறங்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் மூலம் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக வந்து விட்டால் கண்டிப்பாக இவருடைய சினிமா வாழ்க்கை வேற மாதிரி மாறிவிடும். அதே நேரத்தில் இவருடைய நண்பராக இருக்கும் கவின் மாதிரி கூடிய சீக்கிரத்தில் ரசிகர்களை பிடித்து விடுவார் என்ற பேச்சு தான் தற்போது அடிபட்டு வருகிறது.

Also read: கவின் படத்திற்கு போடப்பட்ட பூஜை.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்

Trending News