சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

வருகிறது புதிய விதிமுறை.. 20 ஓவர் போட்டிகளில் நடக்க உள்ள சுவாரசியங்கள்

20ஓவர் போட்டிகளை சுவாரசியமாக மாற்ற பல புதிய விதிமுறைகளை ஐசிசி நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. அந்த புதிய விதிமுறையால் பவுலர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவாரசியமான இந்த விதிமுறையை ஐசிசி வரும் 16ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. பொதுவாக 20 ஓவர்களை ஒன்றரை நேரத்திற்குள் வீசி விட வேண்டும். அவ்வாறு வீசவில்லை என்றால் அது “ஸ்லோ ஓவர் ரேட்” என்று அழைக்கப்படும்.

கிரிக்கெட்டில் இப்படி ஸ்லோவாக,  வீசப்படுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பந்துவீசும் அணியானது பில்டர்களை நிறுத்த அதிக நேரம் எடுத்து கொள்வதால் ஆட்டத்தின் வேகம் குறைகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக ஐசிசி, ஒரு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது ஒன்றரை மணிநேரத்திற்குள் பந்து வீசும் அணி 18 ஓவர்கள் வீசி இருந்தார்கள் எனில், மீதமுள்ள இரண்டு ஓவரில் பவுண்டரி லைனில் நிற்கும் ஒரு வீரர் வட்டத்திற்குள் வந்து விட வேண்டும். இப்படி இன்னர் வட்டத்துக்குள் வருவதால் எதிரணி வீரர்கள் எளிதாக பவுண்டரிகளை விளாச முடியும். இதனால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாக மாறும்.

இந்த பெனால்டியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள், 20வது ஓவரின் முதல் பந்தை வீசி இருக்க வேண்டும். இல்லையேனில் பவுண்டரி லைனில் உள்ள ஒரு வீரர் இன்னர் வட்டத்துக்குள் வந்துவிட வேண்டும்.

இதே போன்று ஒவ்வொரு இன்னிங்சிலும் 10 ஓவர்களுக்கு இடையில், 2 நிமிடம் 30 விநாடிகள் வீரர்கள் தண்ணீர் குடிப்பதற்காக வழங்கப்படும். இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தலாமா, வேண்டாமா என்று ஒவ்வொரு தொடர் தொடங்குவதற்கு முன்பு அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம்.

- Advertisement -spot_img

Trending News