வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பத்து ரூபா பாலாஜி பெயரை துடைக்க வந்த புது ரூல்ஸ்.. குடிமகன்கள் நிம்மதி!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகலில் மதுபான பிரியர்கள் வாங்கு மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை செலுத்தி பெற்றுவருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதைத் தடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சென்னை புறநகர் பகுதிகளில் பாட்டில்களுக்கு ரசீது போட்டு விற்பனை செய்யும்படி புதிய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை அரசே நடத்தி வரும் நிலையில் தமிழ் நாட்டில் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் இருக்கும் நிலையில், இந்த டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு தலா 10 ரூபாய் வீதம் எக்ஸ்ட்ரா வசூலித்த் வருவதாகவும், புல் பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வீதம் வசூலித்து வருவதாகவும், ஆப் பாட்டில் என்றால் 20 ரூபாயும் வசூலிப்பதாகவும் மதுப்பிரியர்கள் வருத்தமுடன் தெரிவித்தனர்.

ஒரு சில டாஸ்மார் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்றதால் புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனால், பல இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவது பற்றி பலரும் வாய் திறப்பதில்லை. இதையே காரணமாக வைத்து பல இடங்களில் இப்படி கல்லா கட்டும் போக்கும் நடந்து வருவதும், இதுகுறித்து எழுந்துள்ள புகார்களும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபாட்டில்களுக்குப் பில் போடும் திட்டம்

இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாஸ்மாக்கில் மதுபாட்டில்களுக்குப் பில் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டுவருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், கொள்முதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களில் பார்கோடு அச்சிட்டு அதன் மூலம் விற்பனையை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை டாஸ்மாக் நிர்வாகம் இனிமேல் கண்காணிக்கவுள்ளது.

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு பயிற்சி

இதன் மூலம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவது குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை புறநகர் பகுதியான காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் 84 டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மதுபாட்டிலுக்கு ரசீது போட்டு விற்பனை செய்யும் பயிற்சியை இன்றுமுதல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News