வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் 25 வது படத்திற்கு வந்த புது தடங்கள்.. ரிலீஸ் இல் இருந்து பின்வாங்கிய அரண்மனை 4

Sundar C: ஆரம்பத்தில் ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி, நடிகர்களுக்கு இருக்கும் மவுஸ் தெரிந்துகொண்டு ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்து விட்டார். அதன்படி கிட்டத்தட்ட 20 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். அதிலும் இவரே இயக்கி நடித்த படங்கள் தான் அதிகமானது. அந்த வகையில் ஹாரர் மூவி படங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றியடைந்திருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக அரண்மனை படத்தை சீரிஸ் வகையில் எடுத்து தற்போது நான்காம் பாகம் வரை எடுத்து முடித்திருக்கிறார். இந்த படம் சுந்தர் சி-யின் 25 வது படமாக இருக்கிறது. இதற்கு இடையில் இவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்களும் சரி, இயக்கிய படங்களும் சரி பெருசாக மக்களிடம் எடுபடாமல் போய்விட்டது.

அதனால் அரண்மனை நான்காம் பாகத்தின் மீது நம்பிக்கையை வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு எந்தவித தடங்களும் இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரொம்பவே மெனக்கெடு செய்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ் பண்ணி விடலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

Also read: இவன் உள்ளூர் ஓணான் எப்ப வேணா அடிச்சுக்கலாம்.. எப்போதும் சுந்தர்சி கூடவே வைத்திருக்கும் அடியாள்

ஆனால் அறிவிப்பு வந்த நிலையில் விஎப்எக்ஸ் பணிகள் தாமதமானதால் கொஞ்சம் நெருக்கடி கொடுத்து படத்தை ரிலீஸ் பண்ணி விடலாம் என்று நம்பிக்கையில் இருந்தவருக்கு மறுபடியும் ஒரு புது தடங்கள் வந்திருக்கிறது. அதாவது சுந்தர் சி படங்கள் முக்கால்வாசி தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ரிலீஸ் ஆகினால் வசூல் அளவில் கல்லா கட்டிவிடும்.

அந்த வகையில் ஏற்கனவே தமிழில் அரண்மனை 4 போட்டியாக லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகப் போவதாக தகவல் வெளியாகிவிட்டது. அதே மாதிரி தெலுங்கிலும் அரண்மனை 4 படத்துக்கு போட்டியாக மூன்று படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது.

அந்த வகையில் குண்டூர் காரம், ஈகிள் மற்றும் விடி13 படங்கள் தெலுங்கில் பொங்கலுக்கு ரிலீசாக போவதால் இப்போதைக்கு அரண்மனை 4 படத்தை ரிலீஸ் பண்ண வேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார். ஒரு கதை நல்லபடியாக அமைந்து படத்தை சரியாக எடுத்து முடித்தால் மட்டும் போதாது. அதை திரையரங்குகளுக்கு கொண்டு சேர்க்கும் வரையில் எவ்வளவு விஷயங்கள் இடைப்பட்ட நேரத்தில் இருக்கிறது என்று இதன் மூலம் நம்மால் உணர முடிகிறது.

Also read: சுந்தர்- சி ரெட் ஜெயண்டுடன் சண்டை போட்டு பிரயோஜனம் இல்ல.. மொத்த பழியும் இப்ப அவங்க மேல

Trending News