செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

காட்டுவாசிகளை களத்தில் இறக்கியது சர்வைவர்.. பதறிய போட்டியாளர்கள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே காடர்கள் அணி வேடர்கள், அணி என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர். இந்த இரண்டு அணிகளுக்கும் கொடுக்கப்படுகின்ற டாஸ்க்கை எந்த அணி வெற்றிகரமாக முடித்து வைக்கிறதோ அந்த அணிக்கு அத்தியாவசிய பொருட்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

இதுவரை வேடர்கள் அணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வேடர்கள் அணிக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களாக சமீபத்தில் மசாலா ஐட்டங்கள் தரப்பட்டுள்ளது. காடர்கள் அணி இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெறாத இந்த நிலமையில், தற்போது வெளியிடப்பட்ட ப்ரோமோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. அடுத்தது என்ன என்பதை சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது இந்த ப்ரோமோ.

தற்போது வெளியிடப்பட்ட இந்த ப்ரோமோவில் சர்வைவர் குழுவினர் காட்டுவாசிகளை களத்தில் இறக்கியுள்ளனர். முதலில் காட்டுவாசிகளை பார்த்ததும் சர்வைவர் போட்டியாளர்கள் பதறிப் போயினர். அதன் பிறகு காட்டு பகுதிகளில் எவ்வாறு இருக்க வேண்டும் எப்படி வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்பதை சாதாரண மனிதர்களை காட்டிலும் காட்டுவாசிகளுக்கே நன்கு தெரியும்.

காட்டை பற்றிய அனுபவமும், அதிக ஞானமும் கொண்டவர்கள் காட்டுவாசிகள் தான். அதனை கற்றுத்தர தான் காட்டுவாசிகள் வந்துள்ளனர் என்பதை போட்டியாளர்கள் புரிந்து கொண்டனர். தற்போது இவர்கள் போட்டியாளர்களுக்கு தேவையான சிலவற்றை சொல்லி தர வந்திருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

survivor
survivor

இவர்கள் சொல்லித்தரும் அனைத்தையும் நன்கு கற்று வைத்துக் கொண்டு அடுத்தடுத்த டாஸ்குகளில் போராடி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று வேடர்கள் அணி ஆர்வமாக இருக்கின்றனர். இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெறதா காடர்கள் அணியினர் இனியாவது வெற்றி பெறுவார்களா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிதாக களமிறக்கப்பட்ட காட்டுவாசிகள் சர்வைவர் போட்டியாளர்களுக்கு வில், அம்பு எவ்வாறு ஏய்வது என்பது குறித்தும், ஈட்டியை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும், குறிபார்த்து எவ்வாறு தாக்க வேண்டும் என்பன போன்ற பல வித்தைகளை கற்றுக்கொடுத்து கொண்டு இருப்பது போல் தற்போது வெளியிடப்பட்ட ப்ரோமோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News