புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நீர் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம்.. பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

சென்னை மாநகரத்தில் நீர்வளத்தை மேம்படுத்துவதற்காக புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தற்போது வெளியிட்டுள்ளார்.

இன்று இடைக்கால பட்ஜெட் ஆனது தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தபோது பேசிய துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

அதன்படி சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்காக உலக வங்கியின் துணையுடன் பல திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பொது சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து என மக்களின் அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் விதமாக பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தப்படும்.

அதுமட்டுமில்லாமல் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார். ஆகையால்தான் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மாநிலத்தின் நீர்வள ஆதாரத்தை பாதுகாப்பதற்காக பல திட்டங்களை செயல்படுத்தியதால் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் ‘தேசிய நீர் விருது’ தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

அதேபோல் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சுமார் 1,418 கோடி ரூபாய் செலவில், 6211 பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதில் தற்போது வரை சுமார் 5886 பணிகள் முடிவடைந்து நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தி வருகிறது என்று தனது உரையில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Trending News