செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

முன்னணி நடிகர்களை குறிவைத்து சான்ஸ் கேட்கும் நடிகை.. ஓவர் கிளாமர் காட்டும் அம்மணி!

சினிமாவில் நுழைந்து 10 வருடங்கள் ஆனாலும் சொந்த மொழியை சொற்ப படங்களையே நடிக்க வாய்ப்பு கிடைத்த நடிகைக்கு, வடக்கில் வாய்ப்பு கிடைக்கவும் அங்கு சென்று விட்டார். அங்கும் இவருக்கு ரசிகர் கூட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது.

அதன் பிறகு கோலிவுட்டில் ஜாக்பாட் அடித்தது போல் மாஸ் ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை அதிர்ஷ்டமாக பெற்றார். ஆனால் அந்தப் படத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடிப்பதற்கான காட்சி எதுவும் அமையவில்லை..

இருப்பினும் இவர் வடக்கு மற்றும் தெற்கிலும் மாறி மாறி பட வாய்ப்புகளை பெறுவதில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அத்துடன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சக நடிகர்களின் படங்களை பாராட்டுவதும், அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் தன்னுடைய நட்பு வட்டாரத்தை பெருக்கி கொண்டார்.

சில சமயம் ஓபனாகவே முன்னணி நடிகர்களிடம் சான்ஸ் கேட்க தொடங்கிவிட்டார். இதனால் இவர் சோசியல் மீடியாவில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாய்ப்பை பெறுவதில் மட்டுமே குறிக்கோளாய் வைத்திருந்தார்.

அதற்கு பலனாக பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கிறார். அத்துடன் அம்மணி தற்போது கவர்ச்சி தூக்கலான போட்டோஷூட் களையும் நடத்தி சினிமாவில் தன்னுடைய இருப்பிடத்தை ஆழமாகப் பதிவு செய்ய துடி துடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே தன்னுடைய இன்ஸ்டாகிராமில் 2.9 பின் தொடர்பாளர்களை தன்வசப்படுத்தி உள்ள, இந்த வளரும் நடிகையின் கிளாமரான புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயம் உங்களுடைய முயற்சி வீணாகாது என்று கிண்டலடித்துக் கொண்டிருக்கின்றனர்.

Trending News