1. Home
  2. கோலிவுட்

விஜய்யை பற்றி சொன்னது எல்லாமே பொய்.. படத்தின் புரமோஷனுக்காக இப்பவே செய்யும் மோசமான வேலை

விஜய்யை பற்றி சொன்னது எல்லாமே பொய்.. படத்தின் புரமோஷனுக்காக இப்பவே செய்யும் மோசமான வேலை

விஜய் தற்போது வாரிசு படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு ஏற்கனவே அவர் கொடுத்த கால்ஷீட்டையும் தாண்டி நடித்து வருகிறார். வம்சி அவரிடம் மேலும் 40 நாட்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டதால் விஜய் மிகவும் டென்ஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சம்பளம் அதிகமாக வேண்டும் என்றும் கேட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்காக எல்லா வேலையும் செய்து வருகிறார். வாரிசு படம் இழுத்துக்கொண்டே போவதால் விஜய் லோகேஷ் கனகராஜிக்கு பதில் கூற முடியாமல் தவித்து வருகிறார்

இந்நிலையில் தற்போது ஷாருக் கான், அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய்க்கு தொடர் வெற்றி படத்தை கொடுத்த அட்லி, ஜவான் படத்தின் மூலம் முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 2-3 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்கின்றனர். விஜய் இந்த படத்தின் சூட்டிங்கில் ஏற்கனவே கலந்து கொண்டதாக தகவல்களும் வந்தன. ஆனால் அது அத்தனையும் பொய். விஜய் இந்த படத்தில் எந்த ஒரு காட்சியிலும் நடிக்க வில்லை. அவர் அட்லியின் பிறந்தநாள் விழாவிற்காகவே அங்கே சென்றுள்ளார்.

அது மட்டுமின்றி பிறந்தநாள் விழாவில் ஷாரூக்கான், அட்லி ,விஜய் ஆகிய மூவரும் எடுத்து கொண்ட புகைப்படம் இப்போது வைரலாகி வந்த நிலையில் விஜய், ஜவான் படத்தில் நடிக்கிறார் என்ற ஒரு புரளி பரவி வந்தது . இது முற்றிலும் பொய் என்று இப்போது நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன .

ஜவான் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரு பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் ஒரு காட்சியில் கூட நடிக்கவில்லை. அவர் ந்தப் படத்தில் நடிப்பதாக சொன்ன அத்தனை விஷயங்களும் பொய். விஜய் நடிப்பதால் இந்த படத்தின் ப்ரோமோஷன் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் மௌனம் காத்து வந்துள்ளனர்.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.