1. Home
  2. கோலிவுட்

தூசி தட்டப்படும் 15 படங்கள்.. 1160 கோடிகளுக்கு வாண வேடிக்கை ரெடி பண்ணிய சுந்தர் சி

தூசி தட்டப்படும் 15 படங்கள்.. 1160 கோடிகளுக்கு வாண வேடிக்கை ரெடி பண்ணிய சுந்தர் சி

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் ஓனர், என பன்முகம் கொண்டவர் திருப்பூர் சுப்ரமணியம். 1950களிலிருந்து 70 வரை 69 படங்களை தயாரித்துள்ளார். அதில் 59 படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். இப்பொழுது இவரின் கடின முயற்சியால் சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா படம் வெளிவந்தது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளிவந்து நல்ல வசூலை பெற்றது. இந்த படத்திற்கு இருந்த பழைய கடன்களை எல்லாம் தூசி போல் ஊதி தள்ளியது. வெறும் 15 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் 40 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்பொழுது டசன் கணக்கில் தேங்கி கிடைக்கும் பழைய படங்களை எல்லாம் தூசி தட்டுகின்றனர். 15 படங்கள் வரை கிடப்பில் கிடக்கிறது, அதற்கு பைனான்சியர்கள் கொடுத்த தொகை, வட்டி என மொத்தமாக சேர்த்து 1160 கோடிகள் கிடப்பில் கிடக்கிறது.

பார்ட்டி, துருவ நட்சத்திரம், அக்னி சிறகுகள், சதுரங்க வேட்டை 2, இடம் பொருள் ஏவல், நரகாசுரன், இன்ஜினியர், ஆலம்பனா போன்ற படங்களை எல்லாம் இப்பொழுது வெளிவந்த மதகஜராஜா படம் போல் ஒவ்வொன்றாய் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

இவ்வளவு பெரும் தொகையை வெளியே கொண்டு வருவதற்கு அடித்தளம் போட்டு உள்ளார் சுப்பிரமணியம். சும்மா அலமாரியில் கிடப்பதற்கு இந்த படங்களை எடுத்து ரிலீஸ் செய்தால் முதலுக்கு மோசம் இல்லாமல் வந்தால் கூட சரிதான் என்ற முடிவை எடுத்தால் வெற்றி பெறலாம்.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.