சண்டக்கோழி 2டும் சமரசமாகி போடும் கூட்டணி.. நட்புன்னா இதுதான்னு சுந்தர்சி ஆடும் மங்காத்தா

சுந்தர் சி சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து கொடுக்கும் இயக்குனர். அதனாலேயே எல்லா தயாரிப்பாளர்களும் சுந்தர் சி என்றால் உடனே பச்சை கொடி காட்டி விடுவார்கள். சமீபத்தில் அவர் காட்டில் தான் கொட்டோ கொட்டுன்னு மழை பெய்கிறது.

தனக்கே உண்டான கமர்சியல், காமெடி பாணியை மாற்றாமல் படங்களை எடுத்து ஹிட் கொடுப்பதில் இன்றுவரை இவரை அடிச்சிக்க ஆளில்லை. இப்பொழுது மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். ஆர்.ஜே பாலாஜி இயக்குவதாக இருந்த இந்த படத்தை, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சுந்தர் சி இடம் ஒப்படைத்து விட்டார்.

இந்த படத்தின் ஹீரோயினான நயன்தாராவிற்கும் இயக்குனர் சுந்தர்சிக்கும் ஆரம்பத்தில் இருந்தே உரசல்கள் இருந்து வந்தது. நயன்தாரா இந்த காஸ்டியூம்ஸ் போட மாட்டேன் என்று பிரச்சனை செய்தார். அதைப்போல் சென்னையில் தான் ஷூட்டிங் வருவேன் என்று அடம்பிடித்தும் வந்தார். இப்பொழுது இதெல்லாம் பழைய கதையாக மாறிவிட்டது.

சுந்தர் சி ஒரு ஜாலியான இயக்குனர். அவரிடம் வேலை செய்வதற்கு அனைவரும் விரும்புவார்கள். தற்போது இந்த இரண்டு சண்டைக்கோழிகளும் நல்ல ஒரு நட்பாய் பழகி வருகிறார்கள். சுந்தர்சியின் பிரண்ட்லியான அணுகுமுறை நயனுக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். இதனால் அடுத்தும் அவர்கள் கூட்டணி போட தயாராகி விட்டனர்.

கார்த்தியை வைத்து சுந்தர் சி அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். இப்பொழுது அந்தப் படத்திற்கும் ஹீரோயினாக நயன்தாரா புக்காகி விட்டாராம். இதுவரை கார்த்தியுடன் அவர் எந்த படத்திலும் சேர்ந்து நடித்ததில்லை. இதனால் இந்த புது காம்போ ஒர்க் அவுட் ஆகும் என்கிறார்கள்.