எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்பே சினிமாவை ஆட்சி செய்த 2 ஜாம்பவான்கள்.. 70-களில் கலக்கிய சூப்பர் ஹீரோஸ்
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப போட்டியாளர்கள் உருவாக தவறுவதில்லை. இப்போது கூட ரஜினி, கமல், விஜய், அஜித் என இரு போட்டியாளர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
அந்த காலத்தில் எம் ஜி ஆர், சிவாஜி இருவரும் தான் தமிழ் சினிமாவை தன் ஆளுமையில் வைத்திருந்தார்கள். அந்த காலகட்டத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் உட்பட பல நடிகர்கள் இருந்தாலும் இவர்கள்தான் இரு பெரும் ஜாம்பவான்கள் ஆக ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே ஏராளமான ரசிகர்களை வைத்திருந்த இரண்டு சூப்பர் ஹீரோக்களும் இருந்தார்கள். 60, 70 காலகட்டத்தில் அவர்கள் தான் பிரபலமான நடிகர்களாக இருந்தார்கள். தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பா இருவரும் தான் அந்த சூப்பர் ஸ்டார்ஸ். பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஏற்ப போட்டியாளர்கள் உருவாக தவறுவதில்லை. இப்போது கூட ரஜினி, கமல், விஜய், அஜித் என இரு போட்டியாளர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றனர். இது போன்ற ஒரு தொழில் போட்டி இருந்தால்தான் சினிமா ஓரளவுக்கு முழுமை அடையும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். அதேபோன்று தான் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் தான் தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்கள். அதிலும் தியாகராஜ பாகவதர் நடிப்பு மட்டுமல்லாமல் அற்புதமாக பாடவும் கூடியவர். 1934 தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்த அவர் 1959 வரை திரையுலகை கலக்கி வந்தார். மிகவும் பிரபலமான நடிகராக இருந்த இவர் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். லட்சுமி காந்தன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அதன் பிறகும் இவருக்கு சினிமாவில் மவுசு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரை போன்றே பி யு சின்னப்பாவும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்தார். உத்தமபுத்திரன், ஆரியமாலா, கண்ணகி உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருடைய நடிப்பு திறமைக்கு சான்றாக இருக்கிறது. மேடை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் பாடி நடித்து வந்த இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து சில வருடங்களிலேயே முன்னணி அந்தஸ்தை பெற்றார். ஆனால் இவர் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்திலேயே தன்னுடைய 35 வது வயதில் உயிர் நீத்தார். இவர் இறப்புக்கு பின் வெளிவந்த சுதர்சன், பணம் சுந்தரி ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு சினிமாவில் கொடிகட்டி பறந்த இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கும் தொழில் ரீதியாக போட்டிகள் இருந்தது. உண்மைதான் ஆனால் அவை ஒரு ஆரோக்கியமான போட்டியாக மட்டுமே இருந்தது. இப்போது இருக்கும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அடித்துக் கொள்வது போல் அப்போதைய ரசிகர்கள் கிடையாது. அவர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் படங்களை ரசித்து விமர்சனம் செய்தார்களே தவிர சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டது கிடையாது.
