1. Home
  2. கோலிவுட்

2025 பொங்கலுக்கு போட்டி போட்டு வெளியாகும் 4 படங்கள்.. ராம் சரனுடன் மோதும் AK

2025 பொங்கலுக்கு போட்டி போட்டு வெளியாகும் 4 படங்கள்.. ராம் சரனுடன் மோதும் AK

இந்த வருடம் பல படங்கள் வெளியாகி ஏகப்பட்ட 100 கோடி வசூலை வாரி கொடுத்தது. இந்த வருடம் மக்கள் கடைசியாக எதிர்பார்க்கும் பெரிய படமென்றால் அது விடுதலை 2 படம் தான்.

இந்த படத்தை தொடர்ந்து மற்ற பெரிய படங்கள் எல்லாம் 2025-ல் தான் வெளியாகிறது. அப்படி 2025-ன் முதல் பண்டிகையான பொங்கலுக்கு முக்கியமான 4 படங்கள் ரிலீசாகிறது.

இந்த வருடம் நடிகர் அஜித்தின் எந்த படமும் வெளியாகாததால், அஜித்தின் விடாமுயற்சி படத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்நோக்கி இருக்கின்றனர்.

மேலும் அந்த படத்தின் ட்ரைலர் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படம் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது..

ராம் சரனுடன் மோதும் அஜித்குமார்

மேலும் அதே நாளில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரணின் Game changer படமும் ரிலீசாகிறது. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் தான் போட்டி என்றே கூறலாம்.

இதை தொடர்ந்து அஜித்துக்கு வில்லனாக மிரட்டி எடுத்த அருண் விஜயின் படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் வணங்கான் படமும், வெளியாகிறது.

இவர்களுக்கு நடுவில், நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள, தாகு மகாராஜ் படமும் ரிலீஸ் ஆகிறது. பொங்கல் ரேஸ்-க்கு 4 படங்கள் வெளியாகும் நிலையில், எந்த படம் அதிக வசூலை பெரும், எந்த படத்துக்கு சிறந்த விமர்சனம் வரும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.