Dhanush : தனுஷ் ராயன் என்ற வெற்றி படத்தை கொடுத்திருந்தார். இப்போது அவரது நடிப்பில் உருவான இட்லி கடை மற்றும் குபேரா படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இது தவிர பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். கிரைம் திரில்லர் கதையில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இதைத்தொடர்ந்து வித்தியாசமான கதை களத்துடன் தனுஷ் படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் 23 வயது நடிகை மமிதா பைஜு நடிகை இருக்கிறார். பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் மமிதா.
தனுசு உடன் ஜோடி போடும் 23 வயது நடிகை
இப்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு மமிதா பைஜுக்கு வந்த வண்ணம் இருக்கிறது.
அந்த வகையில் தனுஷ் உடனும் ஜோடி போட்டு நடிக்க இருக்கிறார். இவ்வாறு இளம் வயதிலேயே நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு பிசியாக இருக்கிறார். பெரிய நடிகைகளுக்கெல்லாம் மார்க்கெட் குறைந்த நிலையில் மமிதா தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.
மேலும் தனுஷ் படத்தின் தயாரிப்பு பணிகள் இப்போது மும்மரமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகளின் பட்டியல் விரைவில் வெளியாகும்.