இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் 25 படங்கள்.. போட்டி போட்டு வெளியிடும் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார்

Feb 2 Ott Release Movies : இப்போது திரையரங்குகளில் படத்தை பார்ப்பதை காட்டிலும் ஓடிடி தளத்தில் பார்க்க தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிப்ரவரி 2ஆம் தேதி ஓடிடியில் மட்டும் கிட்டத்தட்ட 25 படங்களுக்கு அதிகமாக வெளியாகிறது. அவ்வாறு எந்த படங்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் தமிழில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவான செங்குட்டுவன், இவானா நடிப்பில் வெளியான மதிமாறன் படம் ஆஹா தமிழில் வெளியாகிறது. அமேசான் பிரைமில் தெலுங்கில் உருவான சைந்தவ் படம் வெளியாகிறது. ஹாட் ஸ்டாரில் மிஸ்டர் பர்ஃபெக்ட் என்ற படம் வெளியாகிறது.

ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆப்டர் எவ்ரிதிங், அலெக்சாண்டர் த மேக்கிங் ஆப் ய காட் வெப் சீரிஸ் வெளியாகிறது. மேலும் அமேசான் பிரைமில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் அமித் வெளியாகிறது. மலையாளத்தில் ஓமை டார்லிங் என்ற படம் மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

டிஎம்எஸ் என்ற ஓடிடி தளத்தில் சைலன்ட் நைட் என்ற படம் வெளியாகிறது. மேலும் நெட்பிளிக்ஸில் தாய் மொழியில் ரெட் லைப் என்ற படம் வெளியாகிறது. ஹாட் ஸ்டாரின் செல்ஃப் என்ற படம் வெளியாகிறது. இன்னும் மற்ற மொழிகளில் இருந்து எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் படையெடுத்துள்ளது.

அதிலும் குறிப்பாக நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் நிறுவனங்கள் தான் அதிக படங்களை போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு வருகிறார்கள். மேலும் திரையரங்குகளில் இன்று பிப்ரவரி 2 சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் டெவில் என்ற இரண்டு படங்கள் வெளியாகிறது.