2 ஹிட் கொடுத்த பிறகும் ஹரிஷ் கல்யானை பிடித்து ஆட்டும் சனி.. மாட்டிக் கொண்டு முழிக்கும் 3 படங்கள்

ஹரிஷ் கல்யாண் திறமையும், சாக்லேட் பாய் லுக் இருந்த போதிலும் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதுவரை அவர் தேர்ந்தெடுத்த கதைகள் சுமாராக கை கொடுத்தாலும் , வணிக ரீதியாக வெற்றி பெறாமல் அங்கீகாரம் கிடைக்காமல் போகிறது.

சிந்து சமவெளியில் படத்தில் ஆரம்பித்து 15 வருடங்கள் சினிமா துறையில் நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நடிகனாக அறிமுகமானவர், அதன் பின் இன்று வரை 20 படங்கள் நடித்து விட்டார்.பெரும்பாலும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் தான் தேர்ந்தெடுத்து வருகிறார்.

வில் அம்பு , கசடதபற, தாராள பிரபு என ஆண்டுக்கு இரண்டு படங்கள் நடித்தாலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது இரண்டே படங்கள் தான். பார்க்கிங், லப்பர் பந்து படங்கள் இவரை வேறு ஒரு லெவலுக்கு கொண்டு போனது. லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்க செய்தது. இருந்தபோதிலும் இவர் படங்களை சனீஸ்வரன் விட்ட பாடு இல்லை.

ஒரு ஹீரோ பெரிய ஹிட் கொடுத்துவிட்டால் அடுத்தடுத்து அவர் படங்களுக்கு வியாபாரம் தூள் பறக்கும். ஆனால் ஹரிஷ் கல்யாண் நடித்த படங்களுக்கு அது நடக்க இல்லை. இவர் நடித்து முடித்த டீசல், டாசா மக்கான் போன்ற படங்கள் இன்னும் வியாபாரமாகாமல் கிடக்கிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் ஹரிஷ் கல்யாண் நம்பியிருந்த சசி டைரக்சனில் வெளிவர இருக்கும் 100 கோடி வானவில் படமும் டிஜிட்டல், சேட்டிலைட் விற்பனையாகாமல் சோதனை செய்து வருகிறது. இப்படி இரண்டு ஹிட் கொடுத்தாலும் சனி பகவான் அவரை விட்டு இன்னும் விலகியதாக தெரியவில்லை.