1. Home
  2. கோலிவுட்

3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி

3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி
நடைமுறையில் இருக்கும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

விடுதலை படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் லவ் டுடே படத்தின் நாயகன் ஆன பிரதீப் ரங்கராஜன் நடிக்க இருக்கும் படத்தில் செகண்ட் ஹீரோவாய் விஜய் சேதுபதி இடம் பெறுகிறார் என்ற தகவலைப் பொறுத்து ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏஜிஎஸ் தயாரிப்பின் கீழ் வெளிவந்த லவ் டுடே படத்தில் தன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் பிரதீப் ரங்கராஜன். நடைமுறையில் இருக்கும் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 150 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை பெற்ற இப்படத்திற்கு பிறகு தன் அடுத்தக்கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் பிரதீப் ரங்கராஜன்.

இதனிடையே விக்னேஷ் சிவன் கதையில் அஜித் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்ட நிலையில் பிரதீப்பை கொண்டு படம் இயக்க முடிவு எடுத்துள்ளார். மேலும் இப்படத்திலும் பிரதீப் ஹீரோவாக கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயின் ஆக நயன்தாரா இடம் பெறுவார் என்ற பேச்சும் இடம் பெற்று வருகிறது.

இயக்குனராய் இருந்து ஹீரோவாய் மாறிய பிரதீப் ரங்கராஜனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் இவர் அக்ரீமெண்ட் போட்டிருக்கிறாராம். லெஜெண்டுடன் கூட்டணி சேரும் வாய்ப்பை பெரிதாக எண்ணி இப்படத்தில் கமிட்டாகி உள்ளாராம்.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் பிரதீப் ரங்கராஜன் ஒரு படம் கைகோர்க்காராம். இது போன்ற பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து களம் இறங்கும் இவருக்கு இப்படங்கள் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபகாலமாக விக்னேஷ் சிவன் உடன் இவருக்கு இருக்கும் நட்பின் மூலம் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இப்படத்தில் முக்கியமான வேடத்தில் செகண்ட் ஹீரோவாக விஜய் சேதுபதி இடம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.