1. Home
  2. கோலிவுட்

நிற்கக் கூட நேரமில்லாமல் பிஸியாக நடிக்கும் கமலின் 4 படங்கள்.. கொட்டும் பணமழை

நிற்கக் கூட நேரமில்லாமல் பிஸியாக நடிக்கும் கமலின் 4 படங்கள்.. கொட்டும் பணமழை
கமல் 4 படங்களில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். இதனால் இவரின் காட்டில் பணமழை கொட்டப் போகிறது.

சினிமாவில் வெற்றி தோல்வி என்பது நிரந்தரம் கிடையாது என்பதற்கு தகுந்த உதாரணமாக நாம் உலக நாயகனை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இவர் 80, 90களில் எத்தனையோ வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும் இவரால் இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி படத்தை கொடுக்க முடியாமல் தட்டு தடுமாறி துவண்டு போயிருந்தார்.

அந்த நேரத்தில் இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு தான் விக்ரம். இந்த படத்தின் மூலம் வெற்றி வாகையை சூடிவிட்டார். அதன் பின் நாலா பக்கமும் இவருடைய புராணம் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் நடிப்புடன் சேர்ந்து லாபம் சம்பாதிக்கும் பல விஷயங்களில் வரிஞ்சு கட்டி வேலை பார்த்து வருகிறார்.

ஒரு பக்கம் தயாரிப்பாளராக பிசியாக இருக்கிறார். அடுத்து அரசியல் ரீதியாகவும் களத்தில் இறங்கியுள்ளார். அத்துடன் நடிக்கவும் நிறைய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது 4 படங்களில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ஏனென்றால் இதன் மூலம் பெருத்த லாபத்தை சம்பாதித்து பண மழையில் நனையப் போகிறார்.

அப்படி இவர் என்னென்ன படங்களில் நடிக்க இருக்கிறார் என்றால் ஏற்கனவே ரொம்ப வருடமாக இழுவையில் இழுத்து அடித்து கொண்டிருக்கின்ற இந்தியன் 2. ஒரு வழியாக தற்போது படப்பிடிப்பு முடிவடைய இருக்கிறது. இப்படம் அக்டோபர் 14ஆம் தேதி திரையரங்களில் வெளிவர இருக்கிறது.

அடுத்ததாக தெலுங்கு படமான ப்ராஜெக்ட் k என்ற படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக நடிப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் மிக பிரம்மாண்டமான முறையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படுவதால் கமலின் வில்லன் கேரக்டருக்கு 200 கோடிக்கு மேல் சம்பளத்தை கொடுப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள். அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் கமல் இணையப் போகிறார்.

இதனை அடுத்து KH234 இப்படம் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தை மணிரத்தினம் இயக்கி, ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் அதற்கான அறிவிப்புகளும் வெளிவர இருக்கிறது. இதனால் கமலின் காட்டில் பணமழை கொட்டப் போகிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.