வள்ளல் ஐசரி கணேசையும் பதம் பார்த்த 4 படங்கள்..ஜெயம் ரவியை நம்பி போட்ட பெத்த காசு

2016ஆம் ஆண்டு தேவி படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தவர் ஐசரி கணேஷ். இதுவரை 17 படங்கள் தயாரித்துள்ளார். பல இளம் இயக்குனர்களை உருவாக்கித் தந்த பெருமை இவரை சேரும். நடிகர் சங்க உறுப்பினர்கள் 450 பேருக்கு 15 வருடங்களாக பென்ஷன் கொடுத்து உதவி வருகிறார் வள்ளல் ஐசரி கணேஷ். இவர் தயாரிப்பில் மோசமான நஷ்டத்தை கொடுத்த 4 படங்கள்

ஜூங்கா: 2018ஆம் ஆண்டு விஜய் சேதுபதி மூன்று வேடத்தில் நடித்த படம் இது. இந்த படம் 27 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் ஜுங்கா படம் போஸ்டர் ஒட்டிய காசு கூட வசூலிக்கவில்லை. இதனால் ஐசரி கணேஷ் பெரும் நஷ்டம் அடைந்தார்.

பப்பி: நடிகர் வருண் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளிவந்த படம் பப்பி: வெறும் ஐந்து கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படமும் அவருக்கு லாபகரமாக அமையவில்லை. அவருடைய உறவுக்கார பையனான நடிகர் வருண்னை இந்த படத்தின் மூலம் ஹீரோவாக காட்டினார்.

பி டி சார்: 2024 ஹிப் ஹாஃப் ஆதி நடிப்பில் வெளிவந்த படம். நல்ல கதைய அம்சம் இருந்தும் கூட இந்த படத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இந்த படமும் அவருக்கு நஷ்டத்தை தான் ஏற்படுத்தியது. சின்ன பட்ஜெட் படங்கள் என்பதால் ஐசரி கணேஷ் இந்த நஷ்டத்தை எளிதாக சமாளித்து வருகிறார்.

சுமோ: கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்த படத்தை கிடப்பில் போட்டு விட்டனர். தற்போது தூசி தட்டப்பட்ட இந்த படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. சிவா, பிரியா ஆனந்த் போன்றவர்களை வைத்து நகைச்சுவையாக வெளிவந்த இந்த படமும் சரியாக போகவில்லை.

ஜீனி: ஜெயம் ரவி கேரியரிலேயே பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கிறது இந்த படம். கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்து ஜார்ஜியாவில் எடுத்துள்ளனர். இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் ஐசரி கணேஷ்..மொத்தமாக இந்த படத்திற்கு 100 கோடிகளுக்கு மேல் செலவழித்து விட்டாராம்.