2026 தேர்தலுக்கு யாருடன் யார் கூட்டணி வைக்கப் போகிறார் என்ற போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் குமுதம் ரிப்போர்ட்டர்(Morris Media Survey) 40 சீட்டுகள் தவெக-க்கு வெற்றி உறுதி என்பது போன்ற சர்வே டேட்டா ஒன்றை வெளியிட்டுள்ளது.
திமுக 32% உடன் 70-85 சீட்டுகள், அதிமுக 30% உடன் 60-70 சீட்டுகள், தவெக 26.83% உடன் 40 சீட்டுகள், அதே போல நாம் தமிழர் கட்சி 4.43 சதவீதம் இதைத் தாண்டி 50 தொகுதிகளில் கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என்பது போன்ற சர்வே வெளியாகி உள்ளது.
மக்கள் விரும்பும் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விஜய்க்கு 27.81%, எடப்பாடி பழனிசாமிக்கு 2வது இடத்தில் 23.68%, MK ஸ்டாலினுக்கு 20.43%, சீமானுக்கு 5.1% பிஜேபி தலைமையில் அண்ணாமலைக்கு 4.7 சதவீதம் என்பது போன்ற சர்வே ரிப்போர்ட் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க வருமானவரித்துறை கூடுதல் ஆணையராகப் பதவி வகித்த ஐ.ஆர்.எஸ் அருண்ராஜ், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். ராஜலக்ஷ்மி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி என 6 முக்கிய புள்ளிகளை தவெக தட்டி தூக்கி உள்ளது, இன்று இவர்கள் அதிகாரபூர்வமாக கட்சியில் இணையுள்ளனர்.
என்னதான் சர்வே ரிப்போர்ட் வெளிவந்தாலும் கூட்டணி கட்சிகள் இல்லாமல் வெல்வது கடினம் தான். இதனால் அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. விஜய் முகத்திற்காக மட்டுமே ஓட்டு போட மாட்டார்கள் என்ற பிம்பத்தை உடைப்பதற்காக இதுபோன்ற முக்கிய புள்ளிகளை தவெக டார்கெட் செய்துள்ளது.
இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் படித்த, பண்புள்ள, மக்களுக்காக சேவை செய்ய விரும்பும் வேட்பாளர்களை இறக்கினால் இந்த 40 தொகுதிகளை எளிதாக தொட்டுவிடலாம் என்கிறது அரசியல் வட்டாரம். இதனால் தற்போது ஆளும் திமுக மற்றும் எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு கடும் நெருக்கடி நிலவி வருகிறது.