1. Home
  2. கோலிவுட்

4000 கோடிக்கு அதிபதி யார்.? கலாநிதி மாறன் மகளை கரம் பிடிக்கும் நபர், பிரபலம் ஓப்பன் டாக்

4000 கோடிக்கு அதிபதி யார்.? கலாநிதி மாறன் மகளை கரம் பிடிக்கும் நபர், பிரபலம் ஓப்பன் டாக்

Kalanithi Maran : கலாநிதி மாறன் சன் நெட்வொர்க் மற்றும் சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கலாநிதி மாறன், காவேரி தம்பதியினருக்கு காவியா என்ற ஒரே ஒரு மகள் உள்ளார்.

அமெரிக்கா மற்றும் லண்டனில் படித்த இவர் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை நிர்வாகித்து வருகிறார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகவும் காவியா மாறன் இருந்து வருகிறார். கலாநிதி மாறனுக்கு இப்போது 4000 கோடி சொத்துக்கள் இருக்கிறது.

அதற்கு அதிபதியாக வரப்போகும் நபர் இவர்தான் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். அதாவது ஏற்கனவே அனிருத் மற்றும் காவியா இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அதை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தாத நிலையில் பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து பேசி இருக்கிறார்.

கலாநிதி மாறனின் மகளை காதலிக்கும் நபர்

அதாவது அமெரிக்காவில் உள்ள வேகாஸில் அனிருத், காவ்யா இருவரும் சந்தித்திருக்கின்றனர். இவர்களுக்குள் காதல் மலர்ந்திருக்கிறது. மேலும் இரு குடும்பமுமே மிகப்பெரிய குடும்பம் என்பதால் இந்த விஷயம் தற்போது வரை வெளியில் வராமல் இருக்கிறது.

இப்போது அனிருத்துக்கு 34 வயதும், காவியாவுக்கு 32 வயது ஆகிறது. இதுதான் இவர்கள் திருமணம் செய்து கொள்ள சரியான நேரம். இரு குடும்பமே சமமான அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். அதனால் இது ஒரு நல்ல சம்பந்தமாக தான் அமைந்திருக்கிறது.

எனவே விரைவில் இவர்கள் அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை வெளியிட்டால் நன்றாக இருக்கும். அனிருத் மற்றும் காவியா திருமணச் செய்தியை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.